இந்திய அணியில் வீகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப் பந்துவீச்சு மிகச் சிறப்பாக இருப்பதற்கான காரணம் குறித்து இந்திய முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் விளக்கம் அளித்திருக்கிறார்.
இங்கிலாந்து அணிக்கு எதிராக இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெறுவதற்கு மிக முக்கிய காரணமாக இரண்டு இன்னிங்ஸ்களிலும் ஆகாஷ் தீப் பந்துவீச்சு அமைந்தது. பேட்ஸ்மேன்கள் கணிக்க முடியாத அளவுக்கு சிறப்பான பந்துகளை வீசி விக்கெட்டுகளை பறித்து இருந்தால் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆகாஷ் தீப் மீது விமர்சனம்
அந்த ஆண்டு விளையாடுவதற்கு இங்கிலாந்து அணி இந்தியா வந்த பொழுது அந்த தொடரில் ஆகாஷ் தீப்புக்கு முதல் முறையாக வாய்ப்பு கிடைத்தது. அதைத்தொடர்ந்து அவருக்கு ஒவ்வொரு தொடரிலும் ஒரு சில போட்டிகள் விளையாடுவதற்கு வாய்ப்பு கிடைக்கிறது. அவரும் புதிய பந்தில் நல்ல தாக்கத்தை கொடுக்கக் கூடிய பந்துவீச்சாளராக இருக்கிறார்.
அதே சமயத்தில் பந்து பழையதான பிறகு அவரால் விக்கெட்டுகளை கைப்பற்ற முடியாதது பிரச்சனையாக இருந்து வந்தது. உள்நாட்டு கிரிக்கெட்டிலும் இதே பிரச்சனை அவருக்கு இருப்பதாக புள்ளி விபரங்கள் தெரிவித்தன. இப்படியான நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் எல்லா நிலைகளிலும் சிறப்பாக பந்து வீசி இரண்டு இன்னிங்களில் 10 விக்கெட் கைப்பற்றி இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்திருக்கிறார்.
சிறப்பான பந்துவீச்சுக்கு காரணம் என்ன?
இதுகுறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் பேசும்பொழுது “ஆகாஷ் தீப் கிரீசை எல்லா பக்கத்திலும் சிறப்பாக பயன்படுத்தி பந்து வீசுகிறார். ஆனால் அவர் கிரீசில் தூரமாகவோ நடுவிலோ இல்லை நடுவருக்கு பக்கத்திலோ இருந்து எப்படி பந்து வீசினாலும், அவருடைய மணிக்கட்டு நிலை அதாவது ரிஸ்ட் பொசிஷன் பாதிப்பு அடைவது கிடையாது. அது நேராக வந்து விருப்பம் போது எப்படி இருக்குமோ அப்படியே இருக்கிறது”
இதையும் படிங்க: இலங்கை ரசிகர்களின் வாயடைக்க வாய்ப்பு.. பிசிசிஐ-க்கு வந்த திடீர் லக்.. முடிவு 3 பேர் கையில் – வெளியான செய்திகள்
“மேலும் நீங்கள் கிரீசில் வைடாக இருந்து பந்து வீசும் பொழுது உங்களால் ரிஸ்ட் பொசிஷனை நேராக வைக்க முடியாது. ஆனால் அவருக்கு அது நேராகவே இருக்கிறது. இதன் காரணமாக பந்துக்கு பின்னோக்கு சுழற்சியை அதாவது பேக் ஸ்பின்னை வழக்கம் போல் கொடுக்க முடிகிறது. இதன் காரணமாக அவர் பந்து வீச்சு மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது” என்று கூறியிருக்கிறார்.






