இலங்கை ரசிகர்களின் வாயடைக்க வாய்ப்பு.. பிசிசிஐ-க்கு வந்த திடீர் லக்.. முடிவு 3 பேர் கையில் – வெளியான செய்திகள்

0
189
Bcci

இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு இலங்கை கிரிக்கெட் வாரியத்திடம் இருந்து ஒரு புதிய கோரிக்கை வந்திருப்பதாகவும், அது குறித்து இந்திய தரப்பில் மூன்று பேர் மட்டுமே முடிவு செய்வார்கள் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளது.

இந்திய அணி 17 ஆண்டுகளுக்கு பிறகு இலங்கை அணிக்கு எதிராக கவுதம் கம்பீர் பயிற்சியில் ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் தோல்வி அடைந்துள்ளது. தற்போது இதற்கு பதிலடி கொடுப்பதற்கான வாய்ப்பு இலங்க கிரிக்கெட் வாரியத்திடம் இருந்தே வந்திருக்கிறது.

- Advertisement -

இலங்கை ரசிகர்கள் சவால்

தற்போது இலங்கை அணி சொந்த மண்ணில் தொடர்ந்து எட்டு ஒரு நாள் கிரிக்கெட் தொடர்களை வென்று இருக்கிறது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து போன்ற பெரிய அணிகளும் அடக்கம். அந்த சில ஆண்டுகளாக உள்நாட்டில் ஒரு நாள் தொடரை இழக்காத அணியாக சாதனை படைத்து வருகிறார்கள்.

தங்கள் சொந்த மண்ணில் ஒருநாள் தொடரில் இந்திய அணியை தோற்கடித்த காரணத்தினால் இலங்கை அணி ரசிகர்கள் இந்திய அணியின் ரசிகர்களை சமூக வலைதளத்தில் சீண்டுவது வாடிக்கையாக இருந்து வருகிறது. தற்போது இதற்கு பதிலடி கொடுக்க ஒரு அருமையான வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

- Advertisement -

பிசிசிஐக்கு வந்த கோரிக்கை

இந்தியா ஆகஸ்ட் மாதம் மத்தியில் பங்களாதேஷ் என்று ஒருநாள் கிரிக்கெட் மற்றும் டி20 கிரிக்கெட் தொடர்களில் விளையாட இருந்தது. ஆனால் அங்கு உள்நாட்டு சூழ்நிலை சரியில்லாத காரணத்தினால் இந்தத் தொடரை 2026க்கு தள்ளி வைத்துவிட்டது. தற்போது இந்த தேதிகள் இந்திய அணியின் அட்டவணையில் காலியாக இருப்பதால், இலங்கை கிரிக்கெட் வாரியம் இந்திய அணிக்கு எதிராக விளையாட விருப்பம் தெரிவித்து கோரிக்கை அனுப்பி உள்ளது.

இதையும் படிங்க : ரொம்ப எரிச்சலா இருக்கு.. இங்கி டெஸ்ட் மாதிரி இந்த பிரச்சனையை வேறு எங்கும் நான் பார்த்தது இல்லை.. ரிஷப் பண்ட் வருத்தம்

அதே சமயத்தில் இதுகுறித்து பிசிசிஐ, தேர்வுக்குழு தலைவர் அகர்கர் மற்றும் தலைமை பேச்சாளர் கம்பீர் மூவரும் சேர்ந்து முடிவெடுப்பார்கள் என்று இந்திய தரப்பில் கூறப்பட்டிருக்கிறது. இந்த தொடர் நடந்தால் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா திரும்புவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இது செப்டம்பர் மாதம் நடக்க இருக்கும் ஆசிய கோப்பை தொடருக்கும் முன்னோட்டமாக அமையும். இத்துடன் தொடரை சிறப்பான முறையில் வென்றால் இலங்கை ரசிகர்களின் வாயடைக்கவும் உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -