ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற உள்ள குரூப் 4 முதல் ஆட்டத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாட உள்ளன.
இந்த சூழ்நிலையில் இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரரான ஆகாஷ் சோப்ரா இந்த போட்டி குறித்து சில சுவாரசியமான தகவல்களை பகிர்ந்திருக்கிறார்.
இந்த ஆசியக் கோப்பை தொடரை பொறுத்தவரை கம்பீரமாக இந்திய அணி மூன்று போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்ததோடு குரூப் 4 சுற்றுக்கு முன்னேறி இருக்கிறது. இன்று நடைபெற உள்ள போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்கொண்டு விளையாட உள்ளது. பாகிஸ்தான் அணியை பொறுத்தவரை மூன்று போட்டிகளில் இரண்டு போட்டிகள் வெற்றி பெற்று அடுத்து சுற்றுக்கு முன்னேறி இருக்கிறது.
இந்த போட்டியானது இன்று துபாய் ஆடுகளத்தில் நடைபெற உள்ளதால் ஆடுகளம் அபுதாபி ஆடுகளத்தை விட சுழற் பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழ்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா பாகிஸ்தான் வீரர்கள் வருண் சக்கரவர்த்தி மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோரின் பந்து வீச்சை எதிர்கொள்ள கூச்சப்படுவார்கள் என்று சில கருத்துக்களை பகிர்ந்து இருக்கிறார்.
இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “துபாயில் உள்ள ஆடுகளம் அபுதாபியில் இருக்கும் ஆடுகளத்தை விட சுழற்சிக்கு நன்றாக சாதகமாக இருக்கும். பாகிஸ்தான் அணிக்கு எதிரான முந்தைய ஆட்டத்தில் இருந்து நாம் கண்டது என்னவென்றால் அவர்கள் இந்தியாவின் சுழற்சிக்கு எதிராக மிகவும் கூச்ச சுபாவம் உள்ள வீரர்களாக இருக்கிறார்கள். திறமையின்மை வெளிப்பட்டது. உண்மையை கூற வேண்டும் என்றால் அதிக டாட் பால்கள் விளையாடினார்கள்.
இதையும் படிங்க:மச்சான் சொன்னா புரிஞ்சுக்க.. இன்னைக்கு நீ ஆடலனு வருண் கிட்ட சொல்ல வேண்டியதா இருக்கு – சூரியகுமார் பேச்சு
பந்து கையில் இருந்து வெளிவரும் போது, அதை நீங்கள் நன்றாக அறியாவிட்டால் ஒன்று உங்கள் வழியில் விளையாட வேண்டும். இல்லையேல் அவுட் ஆனாலும் பரவாயில்லை என்று அடித்து ஆட வேண்டும் ஆனால் இதில் இரண்டுமே சரி வராது. எனவே இதிலிருந்து நாம் பார்ப்பது என்னவென்றால் பாகிஸ்தான் அணி சுழற் பந்து வீச்சுக்கு எதிராக பலமாகவே போராடி உள்ளது. மேலும் வருண் சக்கரவர்த்தி மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோருக்கு எதிராக கூச்ச சுபாவம் உள்ளவர்களாக இருக்கிறார்கள்” என்று அவர் பேசியிருக்கிறார்.






