இந்திய கிரிக்கெட்

இந்திய அணியை அசர வைத்தார் உண்மைதான்.. ஆனா இனி இந்த விஷயத்தை செஞ்சா மாட்டிக்குவாரு – ரவி சாஸ்திரி

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகிய 19 வயது இளம் வீரர் சாம் கான்ஸ்டாஸ் முதல் போட்டியிலேயே இந்திய வீரர்களை சற்று கலங்கடித்தார்.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் ரவி சாஸ்திரி ஆஸ்திரேலிய இளம் வீரர் குறித்து சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

இந்திய அணியை கலங்கடித்த வீரர்

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் தொடரில் விளையாடி வந்த நிலையில் நான்காவது டெஸ்ட் போட்டியில் 19 வயது இளம் வீரர் சாம் கான்ஸ்டாஸ் தனது முதல் போட்டியில் இந்திய அணிக்கு எதிராக அறிமுகமானார். தனது அறிமுக போட்டியிலேயே 65 பந்துகளில் 60 ரன்கள் விளாசி இந்திய வீரர்களை சற்று ஆச்சரியப்படுத்தினார். அதிலும் குறிப்பாக உலகின் சிறந்த பந்து வீச்சாளரான பும்ராவின் பந்துவீச்சில் அதிரடியான ரன்களைக் குவித்தார்.

அதுமட்டுமல்லாமல் முதல் டெஸ்ட் போட்டியிலேயே விராட் கோலியோடு உரசல் ஏற்பட்டது. அதற்குப் பிறகு ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் பும்ராவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது என்று சில சேட்டைகளை செய்தார். இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான ரவி சாஸ்திரி நான்காவது டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடி இந்திய வீரர்களை கலங்கடித்தார் என்பது உண்மைதான், ஆனால் அதைவிட இந்த விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்று சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

என்னுடைய அறிவுரை இதுதான்

இதுகுறித்து ரவி சாஸ்திரி கூறும் பொழுது “சாம் செய்தது இளமையின் உற்சாகம் தான் என்று நினைக்கிறேன். அவர் தன்னை அறிவிக்க விரும்பினார். அதாவது சூடான ஒரு தகரக் கூரை மேல் ஏறுகிற பூனை போல அவர் தன்னை அறிவிக்க விரும்புகிறார். நிறைய பேச்சுக்கள் இருந்தது, அவர் எதிர்க்கட்சியிடமிருந்து தாக்குதலை எடுத்துச் செல்லும் ஒரு வீரர். அவரது அணி வீரர் சொன்னபடி நடக்க விரும்பினார் அவர் அதை செய்தார்.

இதையும் படிங்க:19 ரன் பரிதாபம்.. வருண் சக்கரவர்த்தி விஜய் சங்கர் போராட்டம் வீண்.. தமிழக அணி நாக் அவுட்டில் வெளியேறியது

மெல்போன் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை குழப்பத்தில் ஆழ்த்தினார், என்பதில் எந்த விதமான சந்தேகமும் இல்லை அது உண்மைதான். ஆனால் அவருக்கு நான் கூறும் அறிவுரை என்னவென்றால் உனக்கு திறமை இருக்கிறது, மற்ற எதையும் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் ரன்கள் குவிப்பதில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும். நீங்கள் உங்கள் பலங்களில் மட்டுமே கவனம் செலுத்துங்கள். உங்கள் வழியில் நீங்கள் விளையாட முயற்சி செய்யுங்கள் அதுவே போதும்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -
Published by

Recent Posts