இந்திய கிரிக்கெட்

50 பந்து.. டார்கெட் வெச்சு.. ரோஹித் இதுல மட்டும் கவனம் செலுத்துனா போதும்.. கம்பேக் தருவாரு – ரவி சாஸ்திரி பேட்டி

இந்திய கிரிக்கெட்டில் ஒரு நாள் மற்றும் டெஸ்ட் அணியின் கேப்டனாக விளங்கி வரும் ரோகித் சர்மா ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மிக மோசமாக செயல்பட்ட நிலையில் ஐந்தாவது போட்டியில் இருந்து மோசமான பேட்டிங் ஃபார்ம் காரணமாக விலகினார்.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் இந்திய முன்னாள் வீரர் ரவி சாஸ்திரி ரோஹித் சர்மாவின் அணுகுமுறையை மாற்ற வேண்டும் என்று சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

ரோஹித் சர்மாவின் மோசமான ஃபார்ம்

இந்திய அணியின் சிறந்த தொடக்க வீரராக விளங்கியவர் ரோகித் சர்மா. மேலும் கேப்டனாக சமீபத்தில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் இந்திய அணிக்காக கோப்பையை வென்று கொடுத்து வரலாறு படைத்தார். இருப்பினும் அந்தப் புகழ் பல நாட்களுக்கு நீடிக்க வில்லை. அடுத்ததாக நடைபெற்ற இலங்கை அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு தோல்வியடைந்ததால் அப்போதே ரோகித் சர்மாவின் பேட்டிங் மற்றும் கேப்டன்சி குறித்து லேசான விமர்சனங்கள் எழுந்தது.

அதற்குப் பிறகு நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சொந்த மண்ணில் தோல்வி அடைந்ததால் அப்போது தொடங்கிய விமர்சனம் சமீபத்தில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்த போது அவர் ஓய்வு பெற வேண்டும் என்கிற ரீதியில் விமர்சனங்கள் எழுந்துள்ளன. மேலும் பேட்டிங்கிலும் தொடர்ந்து தடுமாறி வருவதால் ரோகித் சர்மா இனி ஒரு நாள் போட்டியில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என்று பல தரப்பில் இருந்து விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில் இதுகுறித்து முன்னாள் வீரர் ரவி சாஸ்திரி சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

பேட்டிங் அணுகுமுறை சிந்திக்க வேண்டும்

இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “ரோகித் சர்மா தனது பேட்டிங் திறன் குறித்து மறு பரிசீலனை செய்ய வேண்டும். அவர் தனது பேட்டிங் செய்த நேரத்தை நினைத்துப் பார்த்து அந்த அனுபவத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ரோகித் சர்மா ஒரு குறிப்பிட்ட காலத்தில் எப்படி தனது பேட்டிங் முறையை அணுகினார் என்று அது குறித்து சிந்திக்க வேண்டும். அவர் விரும்பினால் முதல் மூன்று முதல் நான்கு ஓவர்கள் வரை அதிரடியாக ஆடலாம்.

இதையும் படிங்க:பும்ரா சிறந்தவர் கிடையாது.. இதை செஞ்சா தான் அந்த லிஸ்ட்ல அவர் சேர முடியும் – ஆஸி பிராட் ஹாடின் கருத்து

ஆனால் அவர் அந்த 70 ரன்களை பெறுவதற்கு 14 முதல் 15 ஓவர்கள் வரை அங்கேயே இருக்க வேண்டும் என்று அவர் நினைக்க வேண்டும். மேலும் நல்ல ஸ்டிரைக் ரேட்டில் இருக்கவும் முயற்சி செய்ய வேண்டும். அதை செய்வதற்கான எளிய வழி என்னவென்றால் இவ்வளவு ஓவர்கள் பேட் செய்யப் போகிறேன் என்று நினைக்காமல் இத்தனை பந்துகள் நான் நிற்க போகிறேன், உதாரணமாக நான் 50 பந்துகள் விளையாடப் போகிறேன் அப்படி அந்த 50 பந்துகள் விளையாடினால் எனது அணி நல்ல நிலையில் இருக்கும் என்பதை அவர் சிந்திக்க வேண்டும்” என்று ரவி சாஸ்திரி கூறியிருக்கிறார்.

- Advertisement -
Published by