பும்ரா சிறந்தவர் கிடையாது.. இதை செஞ்சா தான் அந்த லிஸ்ட்ல அவர் சேர முடியும் – ஆஸி பிராட் ஹாடின் கருத்து

0
340

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி மூன்று போட்டியில் தோல்வியடைந்து தொடரை இழந்தாலும் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் பும்ரா சிறப்பாக செயல்பட்டு இந்திய அணியின் ஓரளவு போராட்டத்தை வெளிப்படுத்த உதவினார்.

இந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரர் பிராட் ஹாடின் பும்ரா குறித்து சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.

- Advertisement -

ஆதிக்கம் செலுத்திய ஆஸ்திரேலியா

இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளராக கருதப்படும் ஜஸ்பிரித் பும்ரா ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தனது மிகச்சிறந்த பந்துவீச்சை வெளிப்படுத்தினார். இந்தத் தொடரில் அவர் 32 விக்கெட்டுகள் வீழ்த்தி தனி ஒரு மனிதனாக இந்திய அணிக்கு மிகப்பெரும் தூணாக விளங்கினார். கடைசி டெஸ்ட் போட்டியில் மட்டும் இவர் இருந்திருந்தால் இந்திய அணி வெற்றி பெறவே வாய்ப்புகள் அதிகமாக இருந்திருக்கும். ஆனால் எதிர்பாராத விதமாக அவருக்கு ஏற்பட்ட காயத்தால் ஐந்தாவது போட்டியில் இருந்து விலக வேண்டிய நிலை உருவானது.

இந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரர் பிராட் ஹாடின் கூறியிருப்பது பும்ரா மட்டும் இந்த தொடரில் விளையாடவில்லையென்றால் ஆஸ்திரேலியா அணி இந்திய அணியை அனைத்துப் போட்டிகளிலும் வீழ்த்தி முழுமையாக தொடரை கைப்பற்றி இருக்கும் என்று கூறியிருக்கிறார். மேலும் அவரை சிறந்தவர்கள் பட்டியலில் சேர்க்க முடியாது எனவும் அவர் இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டி இருக்கிறது என்று சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

சிறந்தவர்கள் பட்டியலில் இல்லை

இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “பும்ராவின் மகத்துவம், அவரது தனித்தன்மை, போராட்ட குணம் ஆகியவை ஆஸ்திரேலிய அணியின் ஒவ்வொரு பேட்ஸ்மேன் மீதும் அவர் எவ்வளவு ஆதிக்கம் செலுத்தினார் என்பதை நாங்கள் கண்டோம். இது 2005 ஆம் ஆண்டு ஆஷஸ் தொடரில் விளையாடிய ஷேர் வார்னேவின் அணுகு முறையைப் போன்று இருந்தது. பும்ரா மட்டும் இல்லையென்றால் இந்தத் தொடரில் ஆஸ்திரேலியா 5-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை வென்றிருக்கும்.

இதையும் படிங்க:ஃபார்ம் இல்லனாலும்.. நான் செஞ்ச வேலையை விராட் கோலி இனி செய்யணும் – ரிக்கி பாண்டிங் கருத்து

அவர் கிரிக்கெட் வாழ்க்கையை முடிக்கும் நேரத்தில் வேண்டுமானால் வாசிம் அக்ரம், மெக்ராத் போன்ற வீரர்களோடு ஒப்பிட்டு பேசலாம். ஆனால் இந்த தொடரில் பும்ரா மிகவும் செல்வாக்கு செலுத்திய வீரராக இருந்தார். மேலும் நான் பும்ராவை சிறந்தவர்கள் பட்டியலில் சேர்க்க மாட்டேன். அவர் இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டி இருக்கிறது. அவர் இதுவரை டெஸ்ட் கிரிக்கெட்டில் 200 விக்கெட்டுகள் வீழ்த்தி இருக்கிறார். ஆனால் இன்னும் சில காலத்தில் அவரைப் பார்ப்போம் என்று நம்பலாம். அவர் இதே வழியில் சென்று கொண்டிருந்தால் சிறந்தவர்கள் பட்டியலில் அவரது பெயரை காண முடியும்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -