சொன்னா நம்புங்க.. பகார் ஜமானுக்கு இந்த பிரச்சனை இருக்கு.. அதான் அவர டீம்ல சேக்கல – பாக் கேப்டன் ரிஸ்வான் பேட்டி

0
56

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடரில் விளையாடி வருகிறது. அதற்குப் பிறகு ஒரு நாள் தொடரும் பின் டெஸ்ட் தொடரும் நடைபெற இருக்கிறது.

இந்த சூழ்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னணி கிரிக்கெட் வீரரான ஃபகார் ஜமான் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரில் பங்கு பெற அதற்கான காரணம் குறித்து பாகிஸ்தான் கேப்டன் ரிஸ்வான் சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.

- Advertisement -

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடிய போது பாகிஸ்தான் அணியில் இருந்து பாபர் அசாம் நீக்கப்பட்டபோது அவருக்கு ஆதரவாக பகார் ஜமான் தனது சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார். இது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு சிறிய வருத்தத்தை உண்டாக்கியிருக்கிறது. இந்த சூழ்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அவரை மத்திய ஒப்பந்தத்தில் இருந்து நீக்கியது.

அவர் உடல் தகுதியில் பிட்டாக இல்லை அதனால் கைவிடப்படுகிறார் என்று அதற்கான காரணத்தை தெரிவித்தது. இந்த சூழ்நிலையில் தற்போது தென்னாபிரிக்க அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரிலும் பகார் ஜமான் அணியிலிருந்து விலக்கப்பட்டிருப்பது சலசலப்பை உண்டாக்கிய நிலையில் அவருக்கு உண்மையாகவே உடல்நிலை சரியில்லை எனவும் இந்த தனிப்பட்ட காரணம் யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை என பாகிஸ்தான் அணியின் கேப்டன் முகமது ரிஸ்வான் சில கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து அவ்வாறு விரிவாக கூறும்போது “பாகிஸ்தான் முழுவதுமே பகார் ஜமான் குறித்து தெரிந்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். மேலும் அவர் அநீதி இழைக்கும் விதமாக யாரையும் உணர்வைக்கும் வகையில் தனிப்பட்டஎதுவுமே இல்லை. நாங்கள் எங்களுக்குள் நடத்திய உரையாடல்களில் அவர் பாகிஸ்தான் அணிக்கு சற்று வித்தியாசமானவர் என்பது தெரியும்.மேலும் அவர் ஒரு சிறந்த வீரர்.

இதையும் படிங்க:இந்தியா ஆஸி டெஸ்ட்.. நூற்றாண்டின் சிறந்த பிளேயிங் லெவன்.. 6 இந்திய ஜாம்பவான்கள்.. மைக்கேல் கிளார்க் தேர்வு

ஆனால் அவருக்கு உடல்நிலை சரியில்லாதது யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்று நினைக்கிறேன். அவருக்கு ஃபிட்னஸ் பிரச்சனை மற்றும் தனிப்பட்ட உடல் தகுதி தேர்வில் தோல்வியடைந்தது மட்டுமல்லாமல் சில உடல் நலக்குறைவுகளால் பாதிக்கப்பட்டுள்ளார். மேலும் அவர் குணமாகி வந்தால் பாகிஸ்தானில் நடைபெறுகிற டி20 தொடரில் விளையாடுமாறு அவருக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது” என்று ரிஸ்வான் கூறியிருக்கிறார். இன்று நடைபெற்று வருகிற முதல் டி20 போட்டியில் பாகிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்க அணி விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் தென்னாபிரிக்காவில் பாகிஸ்தான் ஆதிக்கம் செலுத்தி மூன்று தொடர்களிலும் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.

- Advertisement -