நான் அப்பவே சொன்னேன் சஞ்சு சாம்சனுக்கு இது கிடையாது.. கம்பீர் இந்த முடிவை எடுப்பார் – இர்பான் பதான் பேச்சு

0
12
Irfan

தற்போது பேட்டிங் ஃபார்ம் இல்லாமல் தடுமாறி வரும் சஞ்சு சாம்சன் டி20 உலகக் கோப்பை பிளேயிங் லெவனில் தன்னுடைய இடத்தை இழப்பார் என இர்பான் பதான் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.

இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் நான்கு போட்டிகளில் இதுவரையில் சஞ்சு சாம்சன் பேட்டிங் சிறப்பாக இல்லை. அவர் ஆட்டம் இழக்கும் முறை மிகவும் மலிவாக இருக்கிறது. இது மிகவும் கவலை அளிக்கக் கூடியதாக மாறி இருக்கிறது.

- Advertisement -

சாம்சன் பிரச்சனை

சஞ்சு சாம்சன் கிரீசில் உள்ளே சென்று தங்குகிறார்; சில நேரங்களில் அப்படியே நின்ற இடத்தில் இருக்கிறார். மேலும் அவருடைய முன் கால் பந்துக்கு தகுந்த மாதிரி சென்று விளையாடுவதில்லை. இந்த காரணத்தினால் அவரால் சரளமாக விளையாட முடியவில்லை. மேலும் விக்கெட்டையும் இழக்கிறார்.

அதே சமயத்தில் இன்னொரு பக்கம் இரண்டாவது விக்கெட் கீப்பிங் ஓபனர் இஷான் கிஷான் மிகவும் அதிரடியாக பேட்டிங் செய்கிறார். அபிஷேக் ஷர்மா கொடுக்கும் தாக்கத்தை அவர் கொடுக்கிறார். இதன் காரணமாக சஞ்சு சாம்சன் தன்னுடைய இடத்தை இழப்பார் என்று தெரிகிறது.

- Advertisement -

நான் முன்பே சொன்னேன்

இதுகுறித்து இர்பான் பதான் பேசும் பொழுது “சஞ்சு சாம்சங் மிகவும் திறமையான ஒரு வீரர். ஆனால் அவரிடம் ரன்கள் எடுப்பதில் நிலைத்தன்மை கிடையாது. அவர் தொடர்ந்து சீராக இதுவரையில் ரன்கள் எடுத்து வந்தது இல்லை. ஒருவேளை அவர் அடுத்த போட்டியில் ரன்கள் எடுக்க கூட செய்யலாம். ஆனா இஷான் கிஷான் மிகவும் சிறப்பாக விளையாடுவது அவர் மனதில் பெரிய அழுத்தமாக உருவாகி இருக்கும்”

இதையும் படிங்க : நாங்க தோற்கலை.. எங்களுக்கு மூணு காரணம் இருந்துச்சு.. அதுக்கு தான் வேலை செஞ்சோம் – சூரியகுமார் யாதவ் பேட்டி

“சஞ்சு சாம்சன் தற்போது பேட்டிங் ஃபார்மில் இல்லை. முன்பு அவர் நல்ல நிலையில் இருந்தார். ஆனால் கில் உள்ளே கொண்டு வரப்பட அவர் பாதிக்கப்பட்டார். மேலும் அடுத்து திலக் வர்மா வந்து விடுவார். இதனால் சஞ்சு சாம்சன் தன்னுடைய இடத்தை இழக்க நேரிடும்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -