அஸ்வின் தன்னை நம்பர் 1 ஸ்பின்னர்னு நினைக்கிறார்.. அவர் ஓய்வு வேடிக்கையானது – பிராட் ஹாடின் பேச்சு

0
887
Haddin

ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் இருந்து இந்திய நட்சத்திர சுழல் பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் பாதையில் ஓய்வு பெற்றது வேடிக்கையானது என ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் பிராட் ஹாடின் கூறியிருக்கிறார்.

இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே ஆஸ்திரேலியாவில் 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடர் நடைபெற்று சமீபத்தில் முடிவுக்கு வந்தது. இந்த தொடரின் மூன்றாவது போட்டி முடிவில் இந்திய சுழல் பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஒட்டுமொத்தமாக சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

- Advertisement -

மூன்று போட்டிகள் மூன்று ஸ்பின்னர்கள்

இந்த முறை இந்திய அணி நிர்வாகம் ஆஸ்திரேலியாவிற்கு ஒரு மணிக்கட்டு சுழல் பந்துவீச்சாளர்களை கூட அழைத்துச் செல்லவில்லை. மாறாக மூன்று விரல் சுழல் பந்து வீச்சு ஆல்ரவுண்டர்களை அழைத்து சென்றது. மேலும் முதல் மூன்று டெஸ்ட் போட்டியில் ஒவ்வொரு போட்டியிலும் ஒவ்வொரு சுழல் பந்துவீச்சாளரை விளையாட வைத்து ஆச்சரியப்படுத்தியது.

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடிய ரவிச்சந்திரன் அஸ்வின் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் நீக்கப்பட்டார். மேலும் அத்துடன் அவர் தனது ஓய்வு முடிவை அறிவித்தார். மேற்கொண்டு அவருக்கு இந்திய அணியில் ஆஸ்திரேலியா தொடரில் விளையாடுவதற்கு வாய்ப்பு கிடைக்காது என்று அவர் உணர்ந்திருந்தார். இருந்த போதிலும் தொடரின் மத்தியில் அவர் ஓய்வு அறிவித்தது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருந்தது.

- Advertisement -

அஸ்வின் முடிவு வேடிக்கையானது

இதுகுறித்து பிராட் ஹேடின் கூறும் பொழுது ” இந்திய அணி நிர்வாகம் முதல் மூன்று போட்டிகளில் 3 ஸ்பின்னர்களை விளையாடியது. அவர்களுக்கு இங்கு விளையாட்டு திட்டம் என்னவென்று புரியாமல் வந்தார்கள். எனவே இந்த விஷயத்திற்கு அதிர்ச்சியாக கூடாது. மேலும் இந்திய அணி இங்கு வந்து வெற்றி பெற்று இருக்கிறது. எனவே அஸ்வின் தொடரின் நடுவில் ஓய்வு பெற்றது வேடிக்கையானது. அவர் தேர்வு செய்யப்படாததால் விலகிவிட்டார்”

இதையும் படிங்க : 50 பந்து.. டார்கெட் வெச்சு.. ரோஹித் இதுல மட்டும் கவனம் செலுத்துனா போதும்.. கம்பேக் தருவாரு – ரவி சாஸ்திரி பேட்டி

“இந்திய அணிகள் அஸ்வின் தன்னை நம்பர் ஒன் ஸ்பின்னர் என்று நினைக்கிறார். எனவே அவருக்கு வாய்ப்பு தராதது அவரை விரக்தி அடைய வைத்திருக்கிறது. எனவே அவர் என்னால் இனி பெஞ்சில் அமர முடியாது, உங்களுக்கு இனி நான் தேவைப்பட மாட்டேன் என்றால் நான் ஓய்வு பெற்றுக் கொள்கிறேன்” என்று கூறிவிட்டு ஓய்வு பெற்று விட்டார் என்று தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -