இந்திய அணிக்காக.. இந்த ஆஸி ப்ளேயரா நான் விளையாடனும்.. அதுக்கு இதுதான் முக்கிய காரணம் – ரவி சாஸ்திரி பேட்டி

0
51

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது டெஸ்ட் போட்டி தற்போது சிட்னி மைதானத்தில் நடைபெற்ற வரும் நிலையில் இதில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து விளையாடி வருகிறது.

இந்த சூழ்நிலையில் இந்திய முன்னாள் வீரர் ரவி சாஸ்திரி வர்ணனையாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு சுவாரசியமான பதிலை அளித்திருக்கிறார்.

- Advertisement -

இந்தியா ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர்

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஐந்து ரெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி விளையாடி வருகிற நிலையில் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றிருந்த நிலையில் அடுத்த இரண்டு போட்டிகளில் தோல்வி மற்றும் ஒரு ட்ரா என இக்கட்டான சூழ்நிலையில் ஐந்தாவது போட்டியில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் கேப்டனாக வெற்றி பெற்ற பும்ரா இந்தப் போட்டியிலும் ரோஹித் சர்மாவுக்கு பதிலாக கேப்டன் பதவியை ஏற்று இருக்கிறார்.

இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளரும், தற்போது இந்த தொடருக்கு வர்ணனையாளராக செயல்பட்டு வரும் ரவி சாஸ்திரி அவ்வப்போது சுவாரசியமான பதில்களை அளித்து கவனம் ஈர்க்க கூடிய வகையில் இருப்பார். இந்த நிலையில் சக வர்ணனையாளர் ஆன சஞ்சனா கணேசன் இந்திய அணிக்கு எந்த ஆஸ்திரேலியா வீரராக விளையாட வேண்டும் என்று ஆசை என கேட்கப்பட்டதற்கு ரவி சாஸ்திரி பேட் கம்மின்ஸ் என்று கூறி அதற்கான விளக்கத்தை கொடுத்திருக்கிறார்.

- Advertisement -

இந்த ஆஸ்திரேலியா வீரராக விளையாட வேண்டும்

இது குறித்து அவர் கூறும் பொழுது “பேட் கம்மின்ஸ். பேட் கம்மின்சை பும்ராவுடன் இணைத்து கொள்ளுங்கள்.இதில் நாம் கொஞ்சம் வேடிக்கையாக இருப்போம். இதனைப் பார்க்கும்போது இரண்டு முனைகளிலும் வேடிக்கையாக இருக்கும். இப்படி ஒரு அணி செல்லட்டும். நான் ஒரு பத்து வருடங்களாக பேட் கம்மின்சை ஆஸ்திரேலிய டிரெஸ்ஸிங் ரூமில் இருந்து பார்த்திருக்கிறேன். 2014ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரையில் மூன்று ஆஸ்திரேலியா தொடர்களில் நான் அவரை பார்த்திருக்கிறேன்.

இதையும் படிங்க:சூப்பர் சூப்பர்னு கத்துவேன்.. ஆனா ரிஷப் பண்ட் இதை செய்யணும்.. அவரால கண்டிப்பா முடியும் – கவாஸ்கர் பேட்டி

அவர் மீதான அபிமானம் மேலும் மேலும் உயர்ந்து இருக்கிறது என்று தான் கூற வேண்டும். ஏனென்றால் அவரது அணுகுமுறை பும்ராவை போன்றது. இதில் முட்டாள் தனம் இல்லை, எந்த ஒரு ஆடம்பரம் இருப்பதில்லை, எந்த ஒரு ஒளிவு மறைவும் இல்லாமல் உண்மையான ஒரு தொழில் வல்லுனர்களைப் போல அவர்கள் தங்களது வேலைகளை செய்து வருகிறார்கள். அவர்கள் இருவரும் மிகவும் கடினமான கிரிக்கெட் வீரர்கள்” என்று ரவி சாஸ்திரி கூறியிருக்கிறார்.

- Advertisement -