இந்திய கிரிக்கெட்

கம்பீர் டிரெஸ்ஸிங் ரூம்ல வச்சு காச்சி எடுங்க.. இந்த ரெண்டு பேர விடாதீங்க.. செஞ்சிதான் ஆகணும் – ரவி சாஸ்திரி கருத்து

இந்திய அணி வெற்றி இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வரலாற்று தோல்வி அடைந்தது. இந்த நிலையில் இந்திய அணியின் ட்ரெஸ்ஸிங் ரூமில் பயிற்சியாளராக கம்பீர் கடுமையாக நடந்து கொள்ள வேண்டும் இந்திய முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியிருக்கிறார்.

- Advertisement -

நேற்று இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த போட்டியில் ஐந்து சதங்கள் அடித்திருந்த போதும் இந்திய அணி தோல்வி அடைந்தது வரலாற்றில் மோசமான நிகழ்வாக பதிவாகியது குறிப்பிடத்தக்கது.

வெல்ல வேண்டிய தருணங்கள்

இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் இந்திய அணி வெகு எளிதாக 500 ரன்கள் தாண்ட முடியும் நிலை இருந்தது. ஆனால் 471 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதே போல இரண்டாவது இன்னிங்ஸில் 450 ரன்கள் எளிதாக எடுக்கக்கூடிய இடத்தில் இருந்தது. ஆனால் இறுதியாக 364 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதற்கு அடுத்து ஃபீல்டிங்கில் மட்டும் மொத்தம் 6 கேட்ச் வாய்ப்புகள் தவறவிடப்பட்டிருக்கின்றன. இந்த கேட்ச் வாய்ப்புகள் எல்லாமே இங்கிலாந்து அணிக்காக அதிக ரன்கள் எடுத்த பேட்ஸ்மேன்களின் கேட்ச் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக இந்திய அணி தான் செய்த தவறுகளின் காரணமாகவே இந்த போட்டியில் தோல்வியடைந்து இருக்கிறது. எனவே கம்பீர் கடுமையாக நடந்து கொள்ள வேண்டும் என ரவி சாஸ்திரி கூறியிருக்கிறார்.

- Advertisement -

கடுமையாகத்தான் நடந்து கொள்ள வேண்டும்

இதுகுறித்து ரவி சாஸ்திரி பேசும்பொழுது “இங்கு பயிற்சியாளரின் பங்கு மிகப் பெரியது. போட்டியிலிருந்து நீங்கள் பாசிட்டிவான விஷயங்களை எடுத்துக் கொள்ளுங்கள். கேப்டனாக கில்லிடம் இருந்து நாம் கேட்க கூடியதை விட அதிகமாக வந்திருக்கிறது. அவர் சதம் அடித்திருக்கிறார் அணியையும் நன்றாக வழி நடத்தி இருக்கிறார். அதே சமயத்தில் அவரது கட்டுப்பாட்டில் இல்லாத விஷயங்களும் களத்தில் நடந்தன. இதற்காக டிரெஸ்ஸிங் ரூமில் கடுமையாக கம்பீர் செல்ல வேண்டும்”

இதையும் படிங்க : இந்திய பேட்டிங் யூனிட் டாபர்மேன் மாதிரி.. இதை கேள்விப்பட்டது ஒரு மாதிரி ஆயிடுச்சு – தினேஷ் கார்த்திக் பேச்சு

” கேட்ச் வாய்ப்புகளை தவறவிடுவது கேப்டன் கையில் கிடையாது. இங்குதான் ஒரு அணியாக உழைத்து வெளியே வர முடியும். மேலும் நீங்கள் பேட்டிங் செய்ய வரும்பொழுது உங்களுடைய விக்கெட்டுக்கு நீங்களே ஒரு விலையை நிர்ணயிக்க வேண்டும். வெறும் கூச்ச சுவாபத்தாலும் சாந்தமான குணத்தாலும் 500, 600 ரன்கள் எடுக்க வேண்டிய சூழ்நிலையை வந்து உடைத்து விட முடியாது. எனவே இதில் தவறு செய்த ஜெய்ஸ்வால், கருண் நாயர் போன்றவர்களிடம் கம்பீர் கடுமையான முறையில் செல்ல வேண்டும்” என்று ரவி சாஸ்திரி கூறியிருக்கிறார்.

- Advertisement -
Published by