சூரியகுமார் பந்தவா சொன்னார் ஆனால் செய்யல.. அதுதான் நல்லதாவும் போச்சு – ரவி சாஸ்திரி கருத்து

0
13
Surya

நேற்று அமெரிக்க அணிக்கு எதிராக இந்திய அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவ் விளையாடிய விதம் குறித்து இந்திய முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பேசியிருக்கிறார்.

இந்திய அணி ஒரே முறையில் அதிரடியாக விளையாடும் என கேப்டன் மற்றும் பயிற்சியாளர் ஏற்கனவே அறிவித்திருந்தார்கள். ஆனால் நேற்று அது பெரிய அளவில் இந்திய அணிக்கு பின்னடைவை உருவாக்கியது. அதே சமயத்தில் சூரியக்குமார் தன்னை மாற்றிக்கொண்டு பொறுமையாக விளையாடி அணியை மீட்டார்.

- Advertisement -

சூரியகுமார் சொன்னதை செய்யவில்லை

இதுகுறித்து ரவி சாஸ்திரி பேசும்பொழுது “சூரியகுமார் யாதவ் மிகவும் நெகிழ்வான முறையில் விளையாடினார். நாங்கள் ஒரே முறையில் அதிரடியாகத்தான் விளையாடுவோம் என அவர் ஏற்கனவே சொல்லி இருந்ததை நீங்கள் கேட்டிருப்பீர்கள். ஆனால் அவர் அப்படியெல்லாம் ஒரே முறையில் விளையாடவில்லை. சூழ்நிலைக்கு ஏற்ற வகையில் தன்னை மாற்றிக் கொண்டு விளையாட அவர் தயாராக இருந்தார்”

“பேட்டிங் செய்வதற்கு ஆடுகளம் எளிமையாக இல்லை என்பதை புரிந்த உடன் அதற்கு தகுந்த மாதிரி தன்னை மாற்றிக் கொண்டார். மற்றவர்கள் விளையாடிய விதத்தில் சூரியகுமார் யாதவ் விளையாடி இருந்தால் இந்திய அணி 120 ரன்கள் அவுட் ஆகியிருக்கும். அப்படி நடந்திருந்தால் அமெரிக்க அணிக்கு வெல்லும் நம்பிக்கை அதிகமாகி இருக்கும்”

- Advertisement -

சூரியகுமாரின் புத்திசாலித்தனம்

“நேற்றைய போட்டியின் இறுதி பகுதியில் சூரியகுமார் யாதவ் தேர்ந்தெடுத்த ஷாட்டுகள் மிகவும் புத்திசாலித்தனமாக இருந்தது. அவர் பந்தின் வேகத்தை பயன்படுத்தி விளையாடிய விதம் இந்திய பேட்ஸ்மேன் களுக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும். ஏனென்றால் மைதானத்தில் முன்னாக ரன்கள் எடுக்க முடியவில்லை. அதனால் அவர் பந்தி வேகத்தை பயன்படுத்தி விளையாடினார்”

இதையும் படிங்க : எங்களை யாரும் எளிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.. நாங்க சும்மா ஆடிட்டு போக வரல – நேபாள் கேப்டன் பேச்சு

“எனக்கு சூரியகுமாரை பற்றி மிகப் பெரிய பிளஸ் பாயிண்ட் என்னவென்றால் அவர் நேற்று தன்னை மாற்றிக் கொண்டு விளையாடிய விதம்தான். ஏனென்றால் அவருடைய இயல்பு இது கிடையாது. நேற்று அணி சிக்கலில் இருந்த பொழுது தான் கேப்டனாக இருப்பதால் பொறுப்பாக விளையாடினார்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -