விராட் கோலி இல்லை.. இப்போ இந்த பையன் பேட்டிங் செய்யறான்னு தெரிஞ்சாலே டிவியை ஆன் பண்ணிடுவோம் – ரவி சாஸ்திரி புகழாரம்

0
53

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்து t20 போட்டிகள் கொண்ட தொடரானது நடைபெற்று வரும் நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முதலாவது டி20 போட்டியில் இந்திய அணி 48 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ஆன ரவி சாஸ்திரி உலகக்கோப்பையில் விளையாடும் இந்திய அணி குறித்து சில முக்கிய கருத்துகளை பேசி இருக்கிறார்.

- Advertisement -

கடந்த 2024ஆம் ஆண்டு இந்திய அணி வெஸ்ட் இண்டீசில் டி20 உலக கோப்பையை ரோகித் சர்மா தலைமையில் வெற்றி பெற்று சாதனை படைத்தது. இந்த சூழ்நிலையில் அடுத்த டி20 உலக கோப்பை அடுத்த மாதம் இந்தியாவில் நடைபெற உள்ள நிலையில் இந்திய அணி மற்ற அணிகளை காட்டிலும் மிகவும் வலுவாக காணப்படுகிறது.

அதிலும் குறிப்பாக இந்திய அணியின் தொடக்க வீரராக களம் இறங்கும் உலகின் நம்பர் ஒன் டி20 பேட்ஸ்மேன் அபிஷேக் சர்மா எதிரணி பவுலர்களை கதி கலங்க வைத்து வருகிறார். சிறிது நேரம் ஆடுகளத்தில் நின்றாலும் அவர் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி விட்டு செல்கிறார் என ரவி சாஸ்திரி பெருமையாக பேசி இருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் விரிவாக பேசும் போது “சந்தேகமே இல்லாமல் தற்போது உலகின் நம்பர் ஒன் டி20 பேட்ஸ்மேன் ஆக அபிஷேக் சர்மா திகழ்கிறார் என்பதில் எந்தவித சந்தேகமும் கிடையாது. கடந்த ஞாயிற்றுக்கிழமை அவர் நியூசிலாந்து அணியிடம் இருந்து ஆட்டத்தை தட்டிப் பறித்தார். நீங்கள் அவரிடம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏனென்றால் அவரது தன்னம்பிக்கை என்பது மிகப்பெரிய அளவு அவரிடம் உள்ளது.

சொந்த ஊர் ரசிகர்கள் அவருக்கு பெரிய ஆதரவு கொடுப்பார்கள். அவர் சிறப்பாக ஆடத் தொடங்கினால் இந்திய அணி சிறப்பாக ஆட தொடங்குவதை போன்றதாகும். கடந்த ஆண்டு வான்கடே மைதானத்தில் அபிஷேக் ஷர்மா இங்கிலாந்து அணிக்கு எதிராக 150 ரன்கள் எடுத்தது நினைவிருக்கிறதா? அந்தப் போட்டிக்குப் பிறகு நாங்கள் அவரை நேர்காணல் கண்டோம், அப்போது என் கையை அவர் தோள் மீது போட்டுக் கொண்டு ‘இளம் வீரனே சர்வதேச கிரிக்கெட்டில் நான் பார்த்த டி20 இன்னிங்ஸ்களில் மிகச் சிறந்த ஒன்று இது’.அந்தப் பையன் ஒரு உண்மையான நட்சத்திரம் அவன் பேட்டிங் செய்கிறான் என்று தெரிந்தாலே இப்போது நீங்கள் டிவியை ஆன் செய்து விடுவீர்கள்” என்று பெருமையாக பேசி இருக்கிறார்.

- Advertisement -