தற்போது இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியின் பேட்டிங் அணுகுமுறை கவலை அளிப்பதாக இருக்கிறது. இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி விராட் கோலிக்கு முக்கிய அறிவுரை ஒன்றை கூறியிருக்கிறார்.
விராட் கோலி இந்திய கிரிக்கெட்டில் மூன்று வடிவத்திற்கும் கேப்டனாக இருந்த பொழுது தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் இருவருக்கும் இடையே நல்ல புரிதலும் நட்பும் இருந்தது. மேலும் ரவி சாஸ்திரி எதையும் கூர்ந்து கவனித்து தீர்வுகள் சொல்வதில் வல்லவர்.
அவுட் ஆகாமலே அவுட்
விராட் கோலி பங்களாதேஷ் அணிக்கு எதிரான தற்போது நடந்து கொண்டிருக்கும் முதல் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் வேகப்பந்து வீச்சில் வெளியில் செல்லும் பந்துக்கு பேட்டை நீட்டி ஆட்டம் இழந்தார். இரண்டாவது இன்னிங்ஸில் சுழல் பந்துவீச்சில் காலுக்குள் வந்து விழுந்த எளிதான பந்தை தடுக்க முடியாமல். ஆட்டம் இழந்தார்.
இதில் இரண்டாவது முறையாக ஆட்டம் இழந்த பொழுது அவருடைய பேட்டில் பந்து சிறிதளவு பட்டிருந்தது. ஆனால் விராட் கோலி ஆல் அதையே உணர முடியவில்லை. இதன் காரணமாக அப்பீல் கேட்காமல் அவுட் என்று ஏற்றுக்கொண்டு வெளியேறி எல்லோருக்கும் அதிர்ச்சி கொடுத்தார். வழக்கமாக விராட் கோலியின் விளையாட்டு விழிப்புணர்வு மிகச் சிறப்பாக இருக்கும். ஆனால் நேற்று அவர் அவுட்டை ஏற்றுக்கொண்டுவெளியேறியது பரிதாபமாக இருந்தது.
விராட் கோலி பயப்படக்கூடாது
இதுகுறித்து ரவி சாஸ்திரி கூறும் பொழுது ” விராட் கோலி கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளில் குறிப்பாக சுழல் பந்துவீச்சாளர்களுக்கு அதிகம் அவுட் ஆகிவிட்டார். அதே சமயத்தில் அவர் அவர்களுக்கு எதிராக நிறைய ரன்கள் எடுத்திருக்கிறார் என்பதை மறக்கக்கூடாது. விராட் கோலி மீண்டும் சுழல் பந்துவீச்சுக்கு எதிராக தனது கால்களை பயன்படுத்தி விளையாட வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
இதையும் படிங்க : விராட் கோலி இப்படிலாம் தப்பு செஞ்சதே இல்லை.. ரொம்ப புதுசா பண்ணிட்டு இருக்காரு – அஜய் ஜடேஜா பேட்டி
“நீங்கள் கிரீஸில் இருந்து இறங்கி சென்று விளையாடுதல், டாப் அப் த பந்தில் அடித்தல், ஸ்வீப் விளையாடுதல் போன்றவற்றை செய்யும் பொழுது ஸ்பின்னர்கள் செட்டில் ஆக முடியாது. விராட் கோலி ரங்கன் குவித்து கொண்டிருந்த பொழுது இதையெல்லாம் செய்தார். இது குறித்து பயந்து கொள்ளாமல் விராட் கோலி மீண்டும் இதையெல்லாம் செய்ய வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.