விராட் கோலி இப்படிலாம் தப்பு செஞ்சதே இல்லை.. ரொம்ப புதுசா பண்ணிட்டு இருக்காரு – அஜய் ஜடேஜா பேட்டி

0
59
Virat kohli and Ajay jadeja

இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டி தற்போது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் நிலையில் இந்திய அணி தற்போது வலுவான நிலையில் இருக்கிறது.

இருப்பினும் இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி இரண்டு இன்னிங்ஸ்களிலும் மோசமான முறையில் ஆட்டம் இழந்து வெளியேறினார். இதுகுறித்து இந்தியாவின் முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா விராட் கோலி ஆட்டமிழந்த விதம் குறித்து சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இந்த ஆண்டின் தொடக்கத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடாத விராட் கோலி நீண்ட காலம் கழித்து தற்போது வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மீண்டும் விளையாடி வருகிறார். முதல் இன்னிங்ஸில் ஆறு பந்துகளை மட்டுமே சந்தித்த நிலையில் ஆறு ரன்களில் வெளியேற்றி விராட் கோலி, இரண்டாவது இன்னிங்ஸில் 37 பந்துகளை எதிர் கொண்டு 17 ரன்களில் வெளியேறினார்.

விராட் கோலி சிறிது நேரம் ஆடுகளத்தில் நின்று விட்டாலே சூழ்நிலையையும், பந்துவீச்சையும் எளிதாக கணித்து அதற்குத் தகுந்தவாறு தன்னை மாற்றிக் கொள்வார். ஆனால் இந்த போட்டியில் அது நடைபெறாமல் விராட் கோலிக்கு எதிராகவே அமைந்துள்ளது. இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா விராட் கோலி ஆட்டம் இழந்த விதம் குறித்து பேசி இருக்கிறார்.

- Advertisement -

இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “விராட் கோலி 20 முதல் 25 பந்துகள் விளையாடிய பிறகு தவறு செய்வதை அரிதாகவே பார்க்கிறீர்கள் என்பதால், விராட் கோலி ஆட்டமிழந்து வெளியேறுவது மிகப்பெரிய ஆச்சரியமாக இருக்கலாம். விராட் கோலி நேராக விளையாடாமல் குறுக்கே விளையாடி ஒரு தவறு செய்தார். ஆனால் அவரும் மனிதர்தான் என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும். இது சீசனின் தொடக்கமாக மட்டுமே இருக்க முடியும்.

எல்லாவற்றையும் மறந்து விடுங்கள், பந்து அவரது பேட்டை தாக்கிய போது பந்து எங்கே செல்கிறது என்று அவருக்குத் தெரியாமல் அவரது மனம் வேறு எங்கோ இருந்திருக்கலாம். நீங்கள் பந்தை பார்க்கும்போது அது சுழல்கிறதா? அல்லது கீழாத வருகிறதா? என்று தெரியும். ஆனால் அதே நேரத்தில் நேராக வரும் பந்துகளுக்கு கூட தவறு செய்தது போல் இருந்தது இது அரிதான நிகழ்வு “என்று ஜடேஜா கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க:19 ரன் 5 விக்கெட்.. ரஷித் கான் மேஜிக்.. ஆப்கானின் மிகப்பெரிய வெற்றி ODI கிரிக்கெட்டில்.. மீண்டும் தென் ஆப்பிரிக்கா தோல்வி

இன்னும் வங்கதேச அணிக்கு எதிராக ஒரு போட்டி மீதம் இருப்பதால் விராட் கோலி தனது தவறுகளை சரி செய்து கொண்டு அடுத்த போட்டியில் மீண்டும் ஃபார்முக்கு வருவார் என்று எதிர்பார்க்கலாம்.

- Advertisement -