இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி விராட் கோலி சீக்கிரத்தில் ஃபார்முக்கு வரவேண்டும் இல்லையென்றால் நிலைமை மோசமாகிவிடும் எனவும் கவலை தெரிவித்து இருக்கிறார்.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் விராட் கோலி ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டம் இழந்தார். அவர் மிகவும் சுமாரான பந்துக்கு மோசமாக விளையாடி ஆட்டம் இழந்தது கவலை தருகிறது.
பிரச்சனை என்ன?
விராட் கோலியின் பேட்டிங் முன்பிருந்தது போல சரளமாக இல்லை. அவரது புட் வொர்க் மிகவும் தயக்கத்துடனும், தாமதமாகவும் செயல்படுவதும் சாதாரண பந்துகளில் கூட அவுட் ஆவதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவர் மனதில் நிறைய விஷயங்கள் ஓடிக் கொண்டிருக்கிறது என கிரிக்கெட் வல்லுனர்கள் கூறுகிறார்கள்.
அதே சமயத்தில் தற்போது இந்திய கிரிக்கெட்டில் ஒவ்வொரு இடத்திற்கும் பல வீரர்கள் வெளியில் காத்துக் கொண்டிருக்கிறார்கள். தற்போது விராட் கோலி மோசமாக விளையாடி வருவதால் அவரை அணியை விட்டு நீக்கவும் செய்யலாம் என்றும் கூறப்படுகிறது.
ரவி சாஸ்திரி கவலை
இதுகுறித்து ரவி சாஸ்திரி பேசும்பொழுது “விராட் கோலி சீக்கிரத்தில் ஃபார்ம் பெற வேண்டும். இந்தியாவில் வெள்ளை பந்து கிரிக்கெட்டுக்கு கடுமையான போட்டி இருக்கிறது. விராட் கோலி ரோஹித் சர்மா யாராக இருந்தாலும் அதைப்பற்றி யாருக்கும் கவலை கிடையாது. அணிக்குள் யாருமே ரிலாக்ஸ் ஆக இருந்து விட முடியாது. இன்று போட்டி மிகவும் கடுமையாக மாறிவிட்டது. எனவே இதை யாரும் எளிதாக எடுத்துக் கொள்ளப் போவது கிடையாது”
இதையும் படிங்க : விராட் கோலி ஓய்வு பெற போகிறாரா? அவர் ரியாக்சனுக்கு அர்த்தமே வேறு.. அவசரப்பட வேண்டாம் என முகமது கையிப் கருத்து
“விராட் கோலி தனக்கு கிடைத்த இன்னொரு வாய்ப்பை நேற்று இறந்து விட்டார். புட்வொர்க் கொஞ்சம் தயக்கமாக இருந்தது. இப்படி அடிக்கடி நடக்காது. ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில் அவருடைய சாதனை மிகவும் அபாரமாக இருக்கிறது. எனவே தொடர்ந்து இரண்டு டக் வந்திருப்பது அவருக்கு மிகவும் கவலையாகவும் ஏமாற்றமாகவும் இருக்கும்” என்று கூறி இருக்கிறார்.






