நிதிஷ் குமாருக்கு அது இதுவே கடைசி முறை.. இனி இந்திய அணி வேற ரூட்ல போலாம் – ரவி சாஸ்திரி பேச்சு

0
923
Shastri

தற்பொழுது நிதிஷ் குமார் ரெட்டி சதம் அடித்திருப்பதின் மூலம் இந்திய அணி நிர்வாகத்திற்கு அவர் வேறு ஒரு முக்கியமான நம்பிக்கையே கொடுத்து இருப்பதாக இந்திய முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி முக்கியமான விஷயங்கள் பற்றி பேசி இருக்கிறார்.

இன்று ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டி மூன்றாவது நாளில் நிதிஷ் குமார் மற்றும் வாஷிங்டன் சுந்தர் இருவரும் சேர்ந்து 127 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்ததோடு, வாஷிங்டன் சுந்தர் அரை சதம் அடிக்க நிதிஷ் குமார் ரெட்டி தனது முதல் சதத்தை எடுத்து இந்திய அணியை கரையேற்றி இருக்கிறார்.

- Advertisement -

புதிய இடத்தில் அபாரமான ஆட்டம்

நிதிஷ் குமார் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய விதத்தை வைத்து அவரை பேட்டிங் ஆர்டரில் மேலே விளையாட வைக்க வேண்டும் என்று பலரும் கூறி வந்தார்கள். இப்படியான நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு ரவீந்திர ஜடேஜா பிளேயிங் லெவலில் வர மீண்டும் அவர் ஏழாவது இடத்திற்கு தள்ளப்பட்டார்.

இதற்கடுத்து இந்தப் போட்டியில் ஆகாஷ் தீப் முன்கூட்டியே நைட் வாட்ச்மேனாக அனுப்பப்பட்ட ஆட்டம் இழந்து விட்டதால், நிதிஷ் குமார் எட்டாவது இடத்தில் வந்தார். இறந்தபோதிலும் சூழ்நிலையை புரிந்து மிகச் சிறப்பான முறையில் விளையாடும் சதம் அடித்து அணியையும் காப்பாற்றி இருக்கிறார்.

- Advertisement -

அவருக்கு இதுவே கடைசி

இது குறித்து ரவி சாஸ்திரி பேசும் பொழுது ” நிதிஷ் குமார் ஏழாவது இடத்தில் பேட்டிங் செய்வது இதுவே கடைசி முறை என்று நான் நினைக்கிறேன். நீங்கள் உங்கள் அணிக்கு சமநிலையை பெறுவதற்கு அவரை ஆறாவது அல்லது ஐந்தாவது இடத்தில் விளையாட வைக்க வேண்டும். இதன் மூலம் உங்களுக்கு நல்ல சமநிலை கிடைக்கும். ஐந்து பந்துவீச்சாளர்களுடன் சென்று 20 விக்கெட்டை கைப்பற்றி வெல்வதற்கான நம்பிக்கையை பயிற்சியாளர் மற்றும் கேப்டனுக்கு அவர் கொடுத்திருக்கிறார்”

இதையும் படிங்க : என் மகனின் சதம்.. சிராஜுக்கு ரொம்ப நன்றி சொல்லிக்கிறேன்.. இது ஆஸி மாதிரியே இல்ல – நிதிஷ் குமார் தந்தை பேட்டி

“நிதிஷ் குமார் முதல் ஆறு இடங்களில் பேட்டிங் செய்வதற்கு முழு தகுதி கொண்டவர். இதன் காரணமாக அது அணியின் சமநிலையை மிக அதிகமாக மாற்றுகிறது. நீங்கள் அடுத்த டெஸ்ட் போட்டியில் சிட்னியில் அவரை ஆறாவது இடத்தில் விளையாட வைத்தால், நீங்கள் ஐந்து பந்துவீச்சாளர்களுடன் செல்லலாம்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -