தன் மகன் நிதிஷ்குமார் சர்வதேச கிரிக்கெட்டில் முதல் சதம் அடிப்பதற்கு உதவி செய்ததற்காக முகமது சிராஜிக்கு நன்றி தெரிவிப்பதாக அவரின் தந்தை கூறியிருக்கிறார்.
இன்று இந்திய அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாளில் பெரிய நெருக்கடியில் சிக்கி இருந்தது. இப்படியான நிலையில் இந்திய அணியின் நிதிஷ் குமார் மற்றும் வாஷிங்டன் சுந்தர் இருவரும் இணைந்து சிறப்பான முறையில் விளையாடி அணியை காப்பாற்றி இருக்கிறார்கள்.
நிதிஷ் குமார் ரெட்டி முதல் சதம்
இன்று மூன்றாவது நாள் ஆரம்பத்தில் விளையாட வந்த ரவிந்திர ஜடேஜா மற்றும் ரிஷப் பண்ட் இருவரும் அடுத்தடுத்து வெளியேறினார்கள். இந்திய அணி இந்த கட்டத்தில் மிகவும் நெருக்கடியான நிலைமையில் சிக்கி, ஃபாலோ ஆன் ஆவதற்கான அதிகபட்ச வாய்ப்பில் இருந்தது.
இந்த நிலையில் வாஷிங்டன் சுந்தர் மற்றும் நிதீஷ் குமார் ரெட்டி இருவரும் சேர்ந்து சிறப்பான முறையில் விளையாடி 127 ரன் பாட்னர்ஷிப் அமைத்தார்கள். வாஷிங்டன் சுந்தர் 50 ரன் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த பும்ரா ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டம் இழந்தார். அப்போது நிதிஷ் குமார் 99 ரன்னில் இருந்தார். கடைசியாக வந்த சிராஜ் சிறப்பாக விளையாடி விக்கெட்டை காப்பாற்றிக் கொண்டார். இதனால் நிதிஷ் குமார் அற்புதமாக தனது முதல் சதத்தை அடித்தார்.
சிராஜுக்கு நன்றி சொல்கிறேன்
இது குறித்து நிதிஷ் குமார் தந்தை பேசும்பொழுது “என் மகனின் ஆட்டத்தை ஆஸ்திரேலியாவில் மைதானத்தில் அமர்ந்து பார்ப்பது போலவே நான் உணரவில்லை. நாங்கள் வழக்கமாக குடும்பத்துடன் பார்ப்பது போலவே இருந்தது”
இதையும் படிங்க : 358 ரன்.. நிதீஷ் குமார் அதிரடி சதம்.. மகத்தான 2 சாதனைகள்.. இந்திய அணி தப்பித்து விட்டதா?
“இது எங்கள் குடும்பத்துக்கு மிகவும் சிறப்பான ஒரு நாளாக அமைந்திருக்கிறது. இதை எங்கள் வாழ்க்கையில் நாங்கள் மறக்க மாட்டோம். அவர் 14 வயதிலிருந்து மிகவும் சிறப்பாக விளையாடி வருகிறார். இப்போது சர்வதேச கிரிக்கெட்டில் இது மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்று. முகமது சிராஜ் தன்னுடைய விக்கெட்டை காப்பாற்றி, என் மகன் சதம் அடிக்க உதவி செய்ததற்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.






