ரிஷப் பண்ட்டுக்காக கண்ணீர் விட்டேன் .. நேத்து அவர்கிட்ட ஆச்சரியப்பட்டது வேற ஒரு விஷயம் – ரவி சாஸ்திரி பேட்டி

0
546
Rishabh

நடப்பு டி20 உலக கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான மிக முக்கியமான போட்டியில் இந்திய அணிக்கு அதிக ரன்கள் எடுத்த வீரராக விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் இருந்தார். மேலும் நேற்றைய போட்டியில் அவர் களத்திலும் மிகச் சிறப்பான முறையில் செயல்பட்டார். இந்த நிலையில் ரவி சாஸ்திரி அவர் குறித்து மிகவும் உருக்கமான செய்திகளை பகிர்ந்து இருக்கிறார்.

நேற்று போட்டி நடைபெற்ற நியூயார்க் நாசாவ் ஆடுகளம் பேட்டிங் செய்வதற்கு சாதகமான முறையில் இல்லை. ஆனால் ரிஷப் பண்ட் தன்னுடைய அதிரடியான அணுகுமுறையை மாற்றிக் கொள்ளாமல் தொடர்ந்து பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களுக்கு எதிராக மோதினார்.

- Advertisement -

இந்த போட்டியில் ரிஷப் பண்ட் 6 பவுண்டர்கள் உடன் 31 பந்துகளில் 42 ரன்கள் எடுத்தார். விக்கெட்டுகள் வேகமாக சரிந்த பொழுது நின்று விளையாட வேண்டிய நிலையில், முகமது அமீர் பந்துவீச்சை நேராக தூக்கி அடிக்க ஆசைப்பட்டு விக்கெட்டை பறிகொடுத்து சென்றார்.

இதற்கு வட்டியும் முதலுமாக சேர்த்து விக்கெட் கீப்பிங்கில் மிகச் சிறப்பான முறையில் செயல்பட்டார். பகார் ஜமான், சதாப் கான் மற்றும் இமாத் வாசிம் ஆகியோரது கேட்ச்களை பிடித்தார். மேலும் அக்சர் பட்டேல் பந்துவீச்சில் உஸ்மான் கானுக்கு சிறந்த முறையில் ரிவ்யூ வாங்கி அவுட்டை பெற்றார். நேற்று இந்திய அணி முகாமில் அவருக்கு சிறந்த பீல்டருக்கான விருது வழங்கப்பட்டது. இதை ரவி சாஸ்திரி வழங்கினார்.

இந்த நிலையில் விருது வழங்கும் பொழுது ரவி சாஸ்திரி பேசுகையில் “ரிஷப் பண்ட்டுக்காக நான் சொல்லக்கூடிய வார்த்தைகள் எல்லாம் அவர் அற்புதமாக செயல்பட்டார். அவருக்கு நடந்த விபத்தை பற்றி நான் கேள்விப்பட்ட பொழுது என் கண்களில் கண்ணீர் வழிந்தது. நான் மருத்துவமனையில் பார்த்த பொழுது நிலைமை மோசமாக இருந்தது. அவர் அங்கிருந்து திரும்பி பாகிஸ்தானுக்கு எதிரான மிக முக்கியமான போட்டியில் இவ்வளவு சிறப்பாக இருந்ததை பார்க்க மகிழ்ச்சி அளிக்கிறது.

- Advertisement -

இதையும் படிங்க : எனக்கு நேத்து போட்டியில் பல விஷயம் சந்தேகமா இருக்கு.. அதுல முக்கியமா இந்த 2 விஷயம் – அக்தர் பேட்டி

பேட்டிங் பொறுத்தவரை உன்னுடைய திறமை என்னவென்று எல்லோருக்கும் தெரியும் நீ ஒரு எக்ஸ்பேக்டர். ஆனால் ஆப்ரேஷன் முடிந்து வந்து விக்கெட் கீப்பிங் இவ்வளவு சிறப்பாக செயல்படுவதை பார்க்க ஆச்சரியமாக இருக்கிறது. உன்னுடைய மூவ்மென்ட் அவ்வளவு வேகமாக இருக்கிறது. இது நீ எவ்வளவு கடினமாக உழைத்து இருக்கிறாய் என்பதற்கு சாட்சி. மக்களுக்கு உத்வேகம் தரக்கூடிய ஒன்றாக உன்னுடைய செயல் மாறி இருக்கிறது. நீங்கள் வெற்றிகளைப் பெறலாம் தொடர்ந்து நன்றாக செயல்படுங்கள்” என்று கூறியிருக்கிறார்.