இந்திய கிரிக்கெட்டில் திட்டங்கள் மற்றும் வெற்றிகளின் அடிப்படையில் மகேந்திர சிங் தோனி இந்திய கேப்டன்களில் மிகப்பெரிய இடத்தில் இருக்கிறார். இந்த நிலையில் ரோஹித் சர்மா திட்டங்கள் மற்றும் வெற்றிகளின் அடிப்படையில் இந்திய கேப்டன்களில் எந்த இடத்தில் இருக்கிறார்? என்பது குறித்து ரவி சாஸ்திரி கூறியிருக்கிறார்.
மகேந்திர சிங் தோனி 3 ஐசிசி தொடர்களை வென்ற கேப்டனாக இந்திய கேப்டன்களில் முதன்மையானவராக இருக்கிறார். ரோகித் சர்மாவை எடுத்துக் கொண்டால் கடந்த டி20 உலக கோப்பையை வென்று ஒரு ஐசிசி தொடரை வென்றவராக இருக்கிறார். அதே சமயத்தில் இரண்டு ஐசிசி தொடர்களின் இறுதிப் போட்டிக்கு சென்ற கேப்டனாகவும் இருக்கிறார்.
இதுகுறித்து பேசி இருக்கும் ரவி சாஸ்திரி கூறும்பொழுது “சிறந்த திட்டங்களை தீட்டக் கூடியவராக ரோகித் சர்மா ஒரு சிறந்த வீரர் என்பதை மறந்து விடக்கூடாது. இதன் காரணமாக இந்திய சிறந்த கேப்டன்களில் தோனிக்கு நிகராக ரோஹித் சர்மாவும் சமமாக இருக்கிறார். திட்டங்கள் தீட்டுவதில் அடிப்படையில் எடுத்துக் கொண்டால் இருவரும் சமமானவர்கள் என்று நான் கூறுவேன். வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் ரோகித் சர்மாவுக்கு இதைவிட பெரிய பாராட்ட என்னால் கொடுக்க முடியாது. ஏனென்றால் மகேந்திர சிங் தோனி இந்த வடிவத்தில் என்ன செய்திருக்கிறார்? என்று நாம் எல்லோருக்கும் தெரியும்.
கேப்டனாக மிகச் சிறந்தவராக இருப்பதற்கு ரோகித் சர்மா வெகு தொலைவில் கிடையாது. நடந்து முடிந்த டி20 உலக கோப்பையில் குறிப்பாக இறுதிப் போட்டியில் மிகச் சிறப்பாக கேப்டன்சி செய்திருந்தார். பும்ரா மற்றும் ஹர்திக் பாண்டியாவை அவர் தேவையான இடங்களில் பெற்று சிறப்பாக செயல்பட வைத்தது பார்ப்பதற்கு அற்புதமாக இருந்தது.
வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் ரோஹித் சர்மாவை நான் ஒரு ராட்சதன் போல பார்க்கிறேன். அவர் இந்த வடிவத்தில் எல்லா காலத்திலும் சிறந்த ஒரு வீரர். எந்த காலமாக இருந்தாலும் இந்த வடிவத்தில் தேர்ந்தெடுக்கப்படும் அணியில் அவர் பெயரும் இருக்கும். அவருக்கு அந்த அளவிற்கு ஆற்றல் மிக்க திறன் இருக்கிறது.
இதையும் படிங்க : சஞ்சு சாம்சன் கிரிக்கெட் எதிர்காலம் அவ்வளவுதானா?.. அந்த பையன் இப்படிதான் – தினேஷ் கார்த்திக் பேச்சு
ரோஹித் சர்மாவிடம் சிறந்த விஷயம் என்னவென்றால் அவர் பெரிய ஷாட் விளையாடி நிறைய ரன்கள் எடுக்கிறார். இதில் என்னை ஆச்சரியப்படுத்த கூடியது என்னவென்றால், அவர் விளையாடும் எல்லா ஷாட்களும் அழகான கிரிக்கெட் ஷாட்கள். அவர் எவ்வளவு நேரம் களத்தில் நின்று பெரிய ஷாட் விளையாடினாலும் அவரிடம் சோம்பலின் அம்சத்தை பார்க்க முடியாது. அவர் பயங்கரமாக அடித்து விளையாடும் வீரர் என்பதை மக்கள் மறந்து விடுகிறார்கள்” என்று கூறியிருக்கிறார்.