இந்திய கிரிக்கெட்டில் உள்ளே வெளியே என மிகவும் சிரமப்படும் வீரராக சஞ்சு சாம்சன் இருந்து வருகிறார். இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரில் கிடைத்த இரண்டு வாய்ப்பையும் அவர் தவறவிட்டதால், அவருடைய கிரிக்கெட் எதிர்காலம் முடிவுக்கு வருகிறதா? என்பது குறித்து இந்திய முன்னாள் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் கூறியிருக்கிறார்
இலங்கை அணிக்கு எதிரான தொடருக்கு முன்பு கடைசியாக தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் சஞ்சு சாம்சன் சதம் அடித்து இந்திய அணி தொடரை வெல்ல மிக முக்கிய காரணமாக இருந்தார். ஆனால் அவருக்கு டி20 இந்தியா அணியில் மட்டுமே வாய்ப்பு கொடுக்கப்பட்டு ஒருநாள் கிரிக்கெட் அணியில் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை.
இந்த நிலையில் இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரில் பிரதான விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட் விளையாடும் அணியில் சேர்க்கப்பட்டார். மேலும் இரண்டாவது போட்டியில் கில் காயமடைந்த காரணத்தினாலும், தொடரை வென்றதால் ரிஷப் பண்டுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டதால் மூன்றாவது போட்டியென இரண்டு போட்டிகளில் சஞ்சு சாம்சன் விளையாடினார்.
இந்த இரண்டு போட்டிகளிலுமே சஞ்சு சாம்சன் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டம் இழந்தார். இதனால் அவர் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்வதில்லை என்றும், அவருக்கு மேற்கொண்டு வாய்ப்புகள் தரக்கூடாது என்றும் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் விமர்சனம் செய்ய ஆரம்பித்தார்கள். இந்த நிலையில் சஞ்சு சம்சனின் கிரிக்கெட் எதிர்காலம் குறித்து தினேஷ் கார்த்திக் பேசியிருக்கிறார்.
இதுகுறித்து தினேஷ் கார்த்திக் கூறும் பொழுது “உங்களுக்கு ரிஷப் பண்ட் போல ஒருவர் இருக்கும் பொழுது சஞ்சு சாம்சனுக்கு அங்கு விளையாடுவதற்கான வாய்ப்புகள் மிகவும் கடினமாகிறது. ரிஷப் பண்ட் டி20 கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடியிருக்கிறார். ஆனால் நான் உங்களுக்கு ஒன்றைச் சொல்ல முடியும் சஞ்சு சாம்சன் ஒரு போராளி. அவருக்கு வாய்ப்புகள் கிடைக்கும் பொழுது அவர் தன்னை நிரூபிப்பார்.
இதையும் படிங்க : ஐபிஎல் மீட்டிங்: பட்டையை கிளப்பிய காவ்யா மாறன்.. 3 முக்கிய கோரிக்கைகள்.. நடந்தது என்ன?
இரண்டு போட்டிகள் சரியாக இல்லை என்கின்ற காரணத்தினால் அவர் ஒரு மோசமான வீரராக மாறப் போவது கிடையாது. அவர் ஒரு சிறப்பான வீரர் என்று நான் நம்புகிறேன். அவர் சமநிலையுடன் இருந்து சூழ்நிலைகளை சிறப்பாக கையாளும் ஒருவர். அவருக்குபிரகாசமான எதிர்காலம் இருக்கிறது மேலும் இந்தியாவுக்காகச் சிறப்பாகச் செயல்படுவார் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் கிடையாது” என்று கூறியிருக்கிறார்.