இந்திய கிரிக்கெட்

சூர்யா நீங்க புத்திசாலி.. ஆனா இந்த ஒரு விஷயத்தை மட்டும் கத்துக்கோங்க – ரவி சாஸ்திரி அட்வைஸ்

இந்திய டி20 அணிக்கு கேப்டனாக சூரியகுமார் யாதவ் நியமிக்கப்பட்டு, இன்று அவர் கேப்டனாக தனது முதல் போட்டியை இலங்கை அணிக்கு எதிராக எதிர்கொள்கிறார். இந்த போட்டிக்கு முன்பாக சூரியகுமார் யாதவ் கற்றுக்கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம் எதுவென்று ரவி சாஸ்திரி கூறியிருக்கிறார்.

- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கையில் 2026 ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெற இருக்கிறது. இந்த இரண்டு வருடங்கள் முழுமையாக சூரியகுமார் யாதவ் இந்திய டி20 அணியின் கேப்டனாக இருப்பார் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. எனவே இந்திய அணியை ஒரு உலகக் கோப்பையில் வழிநடத்தக்கூடிய கேப்டனாக அவர் இருக்கிறார்.

இந்த நிலையில் இந்திய டி20 அணியின் கேப்டன் பொறுப்பில் சூரியகுமார் யாதவ் அவசியம் உடனடியாக கற்றுக் கொள்ள வேண்டிய விஷயம் இருப்பதாகவும், அவர் பேட்டிங் போலவே தன்னுடைய கேப்டன்சியையும் அதிரடியாக தைரியமாகக் கொண்டு வருவார் என்றும் இந்திய முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியிருக்கிறார்.

இதுகுறித்து ரவி சாஸ்திரி பேசும்பொழுது ” சூரியகுமார் யாதவ் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால், தன் அணியில் உள்ள பந்துவீச்சாளர்களின் பலம் என்ன? மற்றும் அவர்களுடைய லிமிடேஷன் என்ன? என்பதுதான்.நான் பந்துவீச்சாளர்களிடம் பலவீனம் இருப்பதாகக் கூறவில்லை. பந்து வீச்சாளர்களிடம் பலம் இருக்கிறது. அவர்களுக்கு ஒரு லிமிடேஷன் இருக்கிறது. நாம் இதைப் புரிந்து கொண்டு ஃபீல்ட் செட்டப்பை அமைக்க வேண்டும். இதைத்தான் அவர் கற்றுக் கொள்ள வேண்டுமென நான் நினைக்கிறேன்.

- Advertisement -

சூரியகுமார் யாதவ் மிகவும் புத்திசாலி என்று எங்களுக்கு தெரியும். தற்போது டி20 கிரிக்கெட்டில் அவர் மிகவும் திறமையான வீரர். மேலும் அவர் தனியாக நின்று ஆட்டத்தை வெல்லக் கூடியவராக இருக்கிறார்.மேலும் அவருக்கு இளம் வீரர்கள் பற்றி மட்டும் இல்லாமல் மூத்த வீரர்கள் பற்றியும் நன்றாக தெரியும். அவர் அணியை கையாள்வதில் சிறப்பாக இருக்க வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.

இதையும் படிங்க: கவுதம் எல்லா டீமுக்கும் சரியான வீரர்களை கொடுத்து இருக்கேன்.. டிராவிட் மெசேஜ்.. கம்பீர் உணர்ச்சிவசம்

இன்று முதல் டி20 போட்டிக்கு அணி எப்படி அமைகிறது என்பது மிகவும் சுவாரசியமான ஒன்றாக இருக்கும். மேலும் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக கம்பீர் தனது முதல் போட்டியை சந்திக்கிறார் என்பதும் இதில் கூடுதல் சுவாரசியமான விஷயம் என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே இந்தப் போட்டிக்கு இந்திய ரசிகர்களிடம் நிறைய எதிர்பார்ப்புகள் உருவாகி இருக்கிறது.

- Advertisement -
Published by