நான் பார்த்து இருக்கேன்.. விராட் ரோஹித் வலைக்கு வந்ததும்.. பும்ரா உடனே இதை செய்வார் – ரவி சாஸ்திரி பேச்சு

0
85
Bumrah

இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் பும்ரா போட்டி என்றாலும் அல்லது பயிற்சி என்றாலும் கூட ஒரு அங்குலத்தை கூட விட்டு தர மாட்டார் என இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியிருக்கிறார்.

நேற்று இங்கிலாந்து அணியின் முதல் இன்னிங்சில் இந்திய பவுலிங் யூனிட்டில் இருந்து இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை அச்சுறுத்திய ஒரே பந்துவீச்சாளராக பும்ரா மட்டுமே இருந்தார். அவரை எதிர்கொள்ளும் ஒவ்வொரு பந்திலும் விக்கெட்டை பாதுகாத்துக் கொள்ள இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் பெரிய சிரமப்பட்டார்கள்.

- Advertisement -

என்னுடைய கவலை இதுதான்

மேலும் ஒருமுனையில் பும்ரா பந்துவீச்சில் மிகச் சிறப்பாக இருந்த நிலையில் மறுமுனையில் எந்த பந்துவீச்சாளரும் அவருக்கு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை. மேலும் இந்திய வீரர்கள் பீல்டிங்கிலும் பும்ராவுக்கு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை. இதன் காரணமாக அவரது உழைப்பு நேற்று பெரிய அளவில் வீணாகியது.

இது குறித்து ரவி சாஸ்திரி பேசும்பொழுது “கண்டிஷனில் ஒரு பெரிய வித்தியாசம் இருக்கிறது. தொடர் இன்னும் முன்னேறி செல்லும் பொழுது பும்ராவின் பணிச்சுமை எவ்வாறு இருக்கும் என்பது தான் என்னுடைய பெரிய கவலையாகவும் இருக்கிறது. பந்து வீசும் பொழுது ஒவ்வொரு ஸ்பெல்லிலும் விக்கெட் கைப்பற்றக்கூடிய ஒருவராக பும்ரா மட்டுமே தற்பொழுது பார்க்கப்படுகிறார். அந்த அளவிற்கு அவர் தரமானவர். அடுத்தடுத்து இந்திய பவுலர்கள் யாராவது அவருக்கு ஒத்துழைப்பு தருவார்கள்” என்று நம்புகிறேன்.

- Advertisement -

விராட் ரோகித்தையும் விட மாட்டார்

“பும்ரா உச்சநிலையில் இருக்கும் பொழுது அவரால் பந்தை பேச வைக்க முடியும். அவர் செய்வதை நீங்கள் நேராகவே பார்த்திருக்கிறீர்கள். ஜோ ரூட் உடனான மோதலில் அவர் உடனடியாக தன்னுடைய தரத்தை உயர்த்திக் கொண்டார். அவர் இப்படியான ஒரு போட்டியாளர்”

இதையும் படிங்க : நேத்து எங்களுக்கு துரதிஷ்டமான நாள்.. அந்த 2 விஷயங்கள் தப்பா போயிடுச்சு – இந்திய பேட்டிங் கோச் பேச்சு

“பும்ராவை பொருத்தவரையில் எதிரில் இருப்பவர்களை பொறுத்து அவர் தன் படத்தை மாற்றிக் கொண்டே இருப்பார். வலைப்பயிற்சி என்று வந்தால் கூட ரோஹித் மற்றும் விராட் கோலி இருந்தால் அவர் வேறு விதத்தில் பந்து வீசுவார். பயிற்சி என்றாலும் கூட அவர் ஒரு அங்குலத்தை கூட விட்டு தர மாட்டார். நான் இதை வலையில் பலமுறை அவர் செய்வதை இந்திய அணியில் பார்த்திருக்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -