ரோகித்தை எச்சரிக்கும் ரவி சாஸ்திரி.. நம்ம அவங்களுக்கு செஞ்சத திருப்பி செய்ய காத்திருக்காங்க.. இதுதான் அவங்களோட நோக்கம்

0
515

இந்திய அணி அடுத்து விளையாடப் போகும் தொடர்களில் மிக முக்கியமாக பார்க்கப்படுவது ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக விளையாடும் பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் ட்ராபித் தொடராகும். காரணம் சமீப காலமாக இந்திய அணி இந்தத் தொடரில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது.

இந்த சூழ்நிலையில் இனி நடக்கப் போகும் தொடர் இந்திய அணிக்கு அவ்வளவு எளிதாக இருக்காது என்று இந்திய கேப்டன் ரோஹித் சர்மாவை முன்னாள் வீரர் ரவி சாஸ்திரி எச்சரித்து இருக்கிறார்.

- Advertisement -

கடந்த ஆறு வருடங்களாக இந்திய அணி டெஸ்ட் தொடரில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வெளிப்படுத்தி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதில் இரண்டு முறை டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வரை முன்னேறி அசத்தியிருக்கிறது. அதைவிட கடந்த இரண்டு முறை ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் ட்ராபித் தொடரில் ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தி வரலாற்று வெற்றி படைத்திருக்கிறது.

அதிலும் 2021ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் இந்திய அணி பெற்ற வெற்றி அவ்வளவு எளிதில் யாராலும் மறந்து விட முடியாது. அப்போது அந்த அணிக்கு இந்தியாவின் ரவி சாஸ்திரி தலைமை பயிற்சியாளராக பதவி வகித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த சூழ்நிலையில் வருகிற நவம்பர் மாதம் இந்திய அணி ஆஸ்திரேலியா சென்று பார்டர் கவாஸ்கர் தொடரில் பங்கேற்க உள்ள நிலையில் ஆஸ்திரேலியாவின் தரமான வேகப்பந்துவீச்சு தாக்குதல் இந்திய அணிக்கு பெரிய சவாலாக இருக்கும் என்று கூறியிருக்கிறார்.

இது குறித்து ரவி சாஸ்திரி விரிவாக கூறும்போது “ஆஸ்திரேலியா இந்த முறை திருப்பிக் கொடுக்க விரும்புகிறது என்று எங்களுக்கு தெரியும். அவர்கள் மிகவும் பசியுடன் இருக்கிறார்கள். இரண்டு முறை ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தி இருப்பதால் இந்த முறை இந்திய அணிக்கு நிச்சயம் சவாலாக விளங்குவார்கள் என்பது எந்த சந்தேகமும் இல்லை. ஆஸ்திரேலியர்கள் அவர்களது வழக்கமான ஆக்ரோச பாணியிலேயே இந்த முறையும் விளையாடுவார்கள்.

- Advertisement -

உலகின் சிறந்த வேகப்பந்து வீச்சு மற்றும் சிறந்த ஆல்ரவுண்ட் பந்துவீச்சு, மேலும் நாதன் லயனும் அங்கு இணையும் போது ஆஸ்திரேலியா அணிக்கு மிகவும் சிறப்பானதாக இருக்கும். அவர்களது நோக்கமே ஆட்டத்திற்கு ஆட்டம் 20 விக்கெட்டுகளையும் எடுத்து தொடரை வெல்வதே ஆகும்” இன்று ரவி சாஸ்திரி கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க:14 ரன் 5 விக்கெட்.. புறக்கணித்த பிசிசிஐ.. இங்கிலாந்தில் மாஸ் காட்டிய சாகல்.. அறிமுக போட்டியில் அசத்தல்

மேலும் ஆஸ்திரேலியா அணியை போலவே இந்திய அணியும் மிகச்சிறந்த தேகப் பந்துவீச்சு தாக்குதல் இருப்பதாகவும் கூறியிருக்கிறார். கடந்த 2021 ஆம் ஆண்டு முன்னணி வீரர்கள் இல்லாத நிலைமையிலும் இந்திய அணியில் மீதம் இருந்த பந்து வீச்சாளர்களை மட்டுமே வைத்துக் கொண்டு ஆஸ்திரேலியாவின் கோட்டை என்று அழைக்கப்படும் கபாவில் டெஸ்ட் தொடரை வெற்றி பெற்று 2-1 என்ற கணக்கில் இந்திய அணி வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.