தற்போது சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அபிஷேக் சர்மா எப்படியான பேட்ஸ்மேன் ஆக இருந்து வருகிறார் என்பது குறித்து இந்திய முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பேசியிருக்கிறார்.
நாளை இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி கான்பெரா மைதானத்தில் நடைபெற இருக்கிறது. சூரியகுமார் யாதவ் தலைமையில் இந்திய அணி கடுமையான தயாரிப்பில் ஈடுபட்டு இருக்கிறது.
அபிஷேக் சர்மாவின் ஆரம்பம்
இந்திய மண்ணில் இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரின் கடைசி போட்டியில் அபிஷேக் சர்மா சதம் அடித்து தன்னுடைய இடத்தை இந்திய டி20 அணியில் உறுதி செய்திருந்தார். இதைத்தொடர்ந்து அவருக்கு அடுத்த வாய்ப்பு ஆசியக் கோப்பையில் இந்திய டி20 அணியில் உடனடியாக ஜெய்ஸ்வாலை தாண்டி கிடைத்தது.
ஆசியக் கோப்பை வாய்ப்பை மிகச் சிறப்பாக பயன்படுத்திக் கொண்ட அபிஷேக் சர்மா இந்திய டி20 அணியில் நீக்க முடியாதவராக மாறிவிட்டார். குறிப்பாக தற்போது மாறி உள்ள கிரிக்கெட்டுக்கு ஏற்ற வகையில் மிகவும் அதிரடியானவராக முதல் பந்தில் இருந்து விளையாடுகிறார். மேலும் பகுதி நேரமாக இடது கை சுழல் பந்துவீச்சாளராக செயல்பட முடியும் என்பது அவருக்கு சாதகமாக அமைகிறது.
குழப்பத்தை உண்டாக்கி விடுவார்
இது குறித்து ரவி சாஸ்திரி பேசும் பொழுது “அபிஷேக் ஷர்மா மிகவும் அதிரடியான வீரர். அவர் சிறிது நேரம் களத்தில் இருந்தால் கூட பொழுதுபோக்கு உறுதியாக கிடைக்கும். நீங்கள் எந்த நாட்டு கிரிக்கெட் ரசிகராக இருந்தாலும் அவரது ஆட்டத்தை ரசிப்பீர்கள். அவர் உங்களிடமிருந்து ஆட்டத்தை பறித்து விடுவார். அவர் இப்படியான குழப்பத்தை உண்டாக்கக் கூடியவர் என்பதால் அவரை விட்டு விளையாட வைக்க யாருமே விரும்ப மாட்டார்கள்”
இதையும் படிங்க : ஆஸி முதல் டி20.. உத்தேச இந்திய பிளேயிங் XI.. கம்பீரின் ரெகுலர் திட்டத்திற்கு சிக்கல்.. சாதிக்க முடியுமா?
“அவரது தயாரிப்பு, அவரது சொந்த திறமையின் மீதான அவரது நம்பிக்கை, அவர் கொண்டிருக்கும் ஷாட்களின் ரேஞ்ச், பின்னர் உள்ளே சென்று முதல் பந்தில் இருந்து தன்னை நம்பி விளையாடுவது என அவர் மிகவும் சிறப்பானவர். மேலும் அவர் முதல் பந்தில் இருந்து அடித்து விளையாடக் கூடியவர் என்பதால் அவர் மிகவும் ஆபத்தானவராக இருக்கிறார். அதே சமயத்தில் அவர் தனது சொந்த திறமையை நம்புவதால் அமைதியாகவும் களத்தில் இருக்கிறார்” என்று கூறியிருக்கிறார்.






