இந்திய அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியை வெல்லும் என்றும், பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரை தக்க வைத்துக் கொள்ளும் என்றும் இந்திய முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியிருக்கிறார்.
இந்த தொடர் 3 போட்டிகள் முடிவடைந்த நிலையில் ஒன்றுக்கு ஒன்று என சம நிலையில் இருக்கின்ற காரணத்தினால், நான்காவது டெஸ்ட் போட்டியை வெல்லும் அணி தொடரை தோற்காத இடத்திற்கு வரும். மேலும் இந்திய அணி இந்த போட்டியை வென்றால், ஏற்கனவே பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரை வென்று இருக்கின்ற காரணத்தினால் தொடரை தக்க வைத்துக் கொள்ளவும் செய்யும்.
ஆஸ்திரேலியா அணிக்கு ஏற்பட்ட கூடுதல் அழுத்தம்
இதன் காரணமாக தற்பொழுது ஆஸ்திரேலியா அணிக்கு கூடுதல் அழுத்தம் ஏற்பட்டிருக்கிறது. இந்தத் தொடரில் இந்திய அணியை விட ஆஸ்திரேலியா அணியை அதிகம் ஆதிக்கம் செலுத்திய அணியாக இருக்கிறது. இப்படியான இடத்தில் இருந்து நான்காவது டெஸ்ட் போட்டியை தோற்றால் தொடரை கைப்பற்ற முடியாது என்பது அந்த அணிக்கு கூடுதல் அழுத்தமாக மாறி இருக்கிறது.
இப்படியான நிலையில் இந்திய அணி நான்காவது டெஸ்ட் போட்டியை அதிரடியாக வென்று தொடரை தக்க வைத்துக் கொள்ளும் என ரவி சாஸ்திரி கூறியிருக்கிறார். மேலும் இந்திய அணி வெல்வதற்கு முக்கியமான இரண்டு காரணங்களையும் அவர் விளக்கமாக பேசியிருக்கிறார்.
இரண்டு முக்கிய காரணங்கள்
இது குறித்து ரவி சாஸ்திரி பேசும்பொழுது “நான்காவது டெஸ்ட் போட்டி வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான ஒரு டெஸ்ட் போட்டியாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். மேலும் இந்தப் போட்டியை வெல்லும் என்றும் தொடரை தக்க வைத்துக் கொள்ளும் என்றும் நம்புகிறேன். பெர்த், அடிலெய்ட் மற்றும் பிரிஸ்பேன் என மூன்று கடினமான மைதானத்தில் விளையாடி, ஒரு வெளிநாட்டு அணி தொடரை தற்பொழுது சமநிலையில் வைத்திருக்கும் என்றால், நிச்சயம் அந்த அணி தொடரில் வெல்வதற்கான வாய்ப்புகள் அதிகம். மேலும் தொடரை வெல்வதற்கு பாக்ஸிங் டே டெஸ்ட் சிறந்த சூழல் என்றும் நினைக்கிறேன்”
இதையும் படிங்க : எல்லாம் போச்சு.. 4வது டெஸ்ட்ல ஹெட் புது தந்திரத்தை கொண்டு வரார்.. அஸ்வின் வெளியிட்ட தகவல்
“ஆஸ்திரேலியா டாப் ஆர்டர் பேட்டிங் உடையக்கூடியதாக இருக்கிறது. அது வலுவானதாக இல்லை. இப்படி உடையக்கூடிய ஒரு டாப் ஆர்டர் ஆஸ்திரேலியா பேட்டிங் வரிசையை பார்த்து நீண்ட காலம் ஆகிவிட்டது. இந்தியா தொடர்ந்து அவர்களின் டாப் ஆர்டரை சுரண்டி கொண்டிருக்கிறது. தற்போது வந்திருக்கும் கான்ஸ்டாஸ் சிறந்த இளம் வீரராக இருக்கிறார். அவர் எதிர்கால ஆஸ்திரேலியா நட்சத்திர வீரராக வருவார்” என்று கூறியிருக்கிறார்.






