எல்லாம் போச்சு.. 4வது டெஸ்ட்ல ஹெட் புது தந்திரத்தை கொண்டு வரார்.. அஸ்வின் வெளியிட்ட தகவல்

0
567
Ashwin

இந்திய அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் ஹெட் இந்திய பந்துவீச்சுக்கு எதிராக புதிய திட்டம் ஒன்றை எடுத்துக் கொண்டு வருவதாக ரவிச்சந்திரன் அஸ்வின் எச்சரிக்கை செய்திருக்கிறார்.

நடப்பு பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டி முடிவுக்கு பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ரவிச்சந்திரன் அஸ்வின் அறிவித்து உடனடியாக நாடு திரும்பி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஹெட் பேட்டிங் திட்டத்தை பற்றி தற்போது அவர் பேசியிருக்கிறார்.

- Advertisement -

தனி ஒரு வீரராக சுமக்கும் ஹெட்

தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரண்டு அணிகளுக்கு இடையேயும் வித்தியாசமாக இருக்கும் இரண்டு வீரர்களாக ஆஸ்திரேலிய தரப்பில் ஹெட் மற்றும் இந்திய தரப்பில் பும்ரா இருவரும் இருந்து வருகிறார்கள். இந்த இருவரது தனிப்பட்ட செயல்பாடுகள் மட்டுமே இரு அணிகளையும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற வைத்திருக்கிறது.

இந்தத் தொடரில் ஹெட் மொத்தம் ஐந்து இன்னிங்ஸ்கள் விளையாடி இரண்டு சதங்கள் மற்றும் ஒரு அரைசதம் உடன் 409 ரன்கள் குவித்திருக்கிறார். இதன் காரணமாக அவருக்கு மிடில்%ஆஃப் லைனில் மற்றும் ஷார்ட் பந்தில் இருக்கும் பிரச்சினைகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தொடர்ந்து வெளியில் இருந்து இந்திய அணிக்கு ஆலோசனைகள் சொல்லப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

ஹெட் செய்திருக்கும் மாற்றம்

இந்த நிலையில் ஹெட் மிடில்&ஆஃப் ஸ்டெம்ப் லைனில் தனக்கு இருக்கும் பிரச்சனையை சமாளிப்பதற்காக பயிற்சியில் ஆஃப் ஸ்டெம்புக்கு நகர்ந்து வந்து விளையாடுகிறார். இதன் மூலம் அவருடைய பலவீனமான லைனில் வரும் பந்தை அவர் லெக் சைடில் சுலபமாக விளையாடி விட முடியும்.

இதையும் படிங்க : பும்ரா திரும்ப என்கிட்ட வராதிங்க.. அந்த விஷயத்தை யாராலும் மறைக்க முடியாது – ஆரோன் பின்ச் பேட்டி

தற்போது இந்தத் திட்டத்துடன் இந்திய அணி வருவதற்கு தயாராக இருந்திருக்கலாம். இந்த நிலையில் ஹெட் அதை முறியடிப்பதற்கு ஒரு திட்டத்துடன் பயிற்சி செய்து கொண்டிருப்பதை பார்த்திருக்கும் ரவிச்சந்திரன் அஸ்வின் “ஓ மை காட்! ஹெட் ஆப் ஸ்டெம்ப் வந்து விளையாடுகிறாரா? இது ரவுண்ட் த ஸ்டெம்பில் இருந்து அவரை அவுட் செய்வதற்கான முயற்சிக்கு எதிராக அவர் செய்திருக்கும் சூழ்ச்சி!” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

- Advertisement -