இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடரில் தற்போது முன்னிலை வகிக்கிறது.
இந்த இரண்டு அணிகளுக்கு இடையேயான இரண்டாவது போட்டி வருகிற இரண்டாம் தேதி முதல் நடைபெற உள்ள நிலையில் இந்திய அணியின் கேப்டன் சுப்மான் கில் குறித்து இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.
முதல் டெஸ்டில் தோல்வி
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது இந்திய சீனியர் வீரர்களான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் பெஸ்ட் பார்மேட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக திடீரென்று அதிர்ச்சியை ஏற்படுத்தினார்கள். இந்த சூழ்நிலையில் இந்திய தலைமை குழு எதிர்காலத்தில் இளம் வீரராக சுப்மான் கில்லை இந்தியா டெஸ்ட் அணியின் அடுத்த கேப்டனாக அறிவித்தது.
சீனியர் வீரர்களான கேஎல் ராகுல் ரிஷப் பன்ட் ஆகியோர் இருந்த நிலையிலும் இந்திய கிரிக்கெட் வாரியம் இளம் வீரரை கேப்டனாக நியமித்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இந்த சூழ்நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற வாய்ப்பு இருந்தும் அனுபவம் இல்லாத கேப்டன்ஷிப் காரணத்தால் முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்துள்ளது. இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, இளம் கேப்டனுக்கு ஆதரவாக சில விஷயங்கள் பேசி இருக்கிறார்.
எதையும் செய்ய வேண்டாம்
இதுகுறித்து அவர் கூறும்போது “கில் இதிலிருந்து முன்னேற்றம் அடையவில்லை என்றால் தான் நான் ஏமாற்றம் அடைவேன். சோர்வான, சோம்பேறித்தனமான, நேர்த்தியான அவர் பேட்டிங் செய்யும் போது ஒரு ராஜ தந்திரிக குணத்தை கொண்டு உள்ளார். காலப்போக்கில் சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு தன்னை மாற்றினால், சிறந்த கேப்டன்களில் நான் பார்க்கக் கூடிய பெயர்களில் அவரும் ஒருவராக இருப்பார் என்று நினைக்கிறேன்.
இதையும் படிங்க:2வது டெஸ்ட்.. ரிஷப் பண்ட்க்கு காத்திருக்கும் அரிய வரலாற்று சாதனை.. யாரும் நினைத்து பார்க்க முடியாத ரெக்கார்ட்
அவர் நிறைய முதிர்ச்சி அடைந்து விட்டார் என்று தோன்றுகிறது. ஊடகங்களை அவர் கையாளும் விதம், பத்திரிகையாளர் சந்திப்புகளில் பேசும் விதம் நிறைய முதிர்ச்சி அடைந்திருக்கிறார். எனவே மூன்று வருடங்கள் கேப்டனாக அவர் அங்கேயே இருக்க வேண்டும். தொடரில் என்ன நடந்தாலும் எந்த மாற்றத்தையும் கொண்டுவர வேண்டாம். மூன்று வருடங்கள் அவருடனே தொடர்ந்து பயணியுங்கள். அவர் சிறப்பாக செயல்படுவார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது” என பேசி இருக்கிறார்






