2வது டெஸ்ட்.. ரிஷப் பண்ட்க்கு காத்திருக்கும் அரிய வரலாற்று சாதனை.. யாரும் நினைத்து பார்க்க முடியாத ரெக்கார்ட்

0
79
Rishabh

இங்கிலாந்து மண்ணில் இதுவரை எந்த ஒரு கிரிக்கெட் வீரரும் செய்யாத சாதனையை படைப்பதற்கு ரிஷப் பண்டுக்கு பெரிய சந்தர்ப்பம் அடுத்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அமைந்திருக்கிறது.

தற்போதைக்கு உலகில் சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் பட்டியலில் யாரும் எதிர்பார்க்காத வகையில் ரிஷப் பண்ட் முக்கியமானவராக மாறியிருக்கிறார். மேலும் தரவரிசையில் முதல் 10 இடங்களுக்குள் முன்னேறி அசத்தியிருக்கிறார். முதல் டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்ஸிலும் சதம் அடித்த காரணத்தினால் அவருக்கு பெரிய முன்னேற்றம் தரவரிசையில் கிடைத்திருக்கிறது.

- Advertisement -

இரண்டாவது டெஸ்ட் போட்டி மைதானம்

அடுத்து இரண்டாவது டெஸ்ட் போட்டி பர்மிங்காம் எட்ஜ்பஸ்டன் மைதானத்தில் அடுத்த மாதம் ஜூலை இரண்டாம் தேதி துவங்குகிறது. இந்த மைதானத்தின் ஆடுகளத்தில் ஓரளவுக்கு பவுன்ஸ் அதிகமாக இருந்தாலும் பேட்டிங் செய்வதற்கு சாதகமான ஆடுகளமாகவே இருக்கும் என்று கூறப்படுகிறது.

எனவே முதல் டெஸ்ட் போட்டி போலவே அடுத்த இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் பேட்ஸ்மேன்கள் ஆதிக்கம் செலுத்துவதற்கான அதிக வாய்ப்புகள் இருக்கிறது. இந்த காரணத்தினால் அடுத்த டெஸ்ட் போட்டியில் இரண்டு மெகா சாதனைகளை இங்கிலாந்து அணிக்கு எதிராக இங்கிலாந்து மண்ணில் படைப்பதற்கு ரிஷப் பண்ட்க்கு அருமையான வாய்ப்பு அமைந்திருக்கிறது.

- Advertisement -

காத்திருக்கும் அரிய வாய்ப்பு

இங்கிலாந்துக்கு எதிராக 2022 ஆம் ஆண்டு இங்கிலாந்து மண்ணில் கடைசியாக விளையாடிய டெஸ்ட் போட்டியில் ரிஷப் பண்ட் சதம் அடித்தார். இதைத்தொடர்ந்து தற்போது இரண்டு இன்னிங்ஸிலும் சதம் அடித்து இரண்டு டெஸ்ட் போட்டியில் மூன்று சதங்கள் இங்கிலாந்து அணிக்கு எதிராக இங்கிலாந்து மண்ணில் அடித்தவராக இருக்கிறார்.

இதையும் படிங்க : இந்திய பயிற்சி முகாம்.. இணைந்த வீரர்.. நிம்மதி பெருமூச்சு விட்ட கம்பீர்.. மாறும் திட்டங்கள்.. ரசிகர்கள் மகிழ்ச்சி

மேலும் 2022 ஆம் ஆண்டு அடுத்து இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெறும் பர்மிங்காம் மைதானத்தில் சதம் அடித்தார். இந்த நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்ஸில் ஒரு சதத்தை ரிஷப் பண்ட் அடித்தால், இங்கிலாந்து அணிக்கு எதிராக மூன்று டெஸ்ட் போட்டியில் தொடர்ந்து நான்கு சதங்கள் அடித்த முதல் பேட்ஸ்மேன் என்ற சாதனையையும், இங்கிலாந்து பர்மிங்காம் மைதானத்தில் இரண்டு சதம் அடித்த ஒரே இந்திய வீரர் என்ற சாதனையையும் படைப்பார். இந்த மைதானத்தில் சச்சின், விராட் கோலி ரிஷப் பண்ட் மற்றும் ரவீந்திர ஜடேஜா நால்வர் மட்டுமே இந்தியர்களாக டெஸ்ட் சதம் அடித்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -