இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்டின் மூன்றாவது நாளில் கில் கேப்டன்சி குறித்து ரவி சாஸ்திரி விமர்சனம் செய்திருக்கிறார்.
இங்கிலாந்து அணி இன்றைய மூன்றாவது நாளில் 84 ரன்னுக்கு ஐந்து முக்கிய விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதற்குப் பிறகு ஜெமி ஸ்மித் மற்றும் ஹாரி புரூக் இருவரும் அதிரடியாக விளையாடி சதம் அடித்து இங்கிலாந்து அணியை காப்பாற்றி இருக்கிறார்கள்.
கில் மீதான புஜாரா விமர்சனம்
கில் கேப்டன்சி குறித்து புஜாரா பேசும் பொழுது ” இந்தியா தற்காப்புடன் செயல்பட நினைக்கிறது. உங்களிடம் ரன் நிறைய இருக்கும் பொழுது உங்கள் கையில் புதிய பந்து இருக்கும்பொழுது நீங்கள் தாக்குதல் செய்ய வேண்டும். இது தற்காப்புடன் செயல்பட வேண்டிய நேரம் கிடையாது. அவர்கள் ஓரிரு பவுண்டர்கள் அடித்தாலும் கில் அதைப்பற்றி கவலைப்படக் கூடாது”
“நான் அதிகப்படியான தாக்குதலை செய்ய சொல்லவில்லை. குறிப்பிட்ட அளவுக்கு தாக்குதல் செய்ய வேண்டும் என்று சொல்கிறேன். குறிப்பாக இரண்டாவது நாளில் டீப் ஸ்கொயர் லெக் வைக்கப்பட்டிருந்தது. ஆனால் அது ஜாக் கிரவுலிக்கு உள்ளே விக்கட்டுக்காக வைக்க வேண்டிய பீல்டிங் பொசிஷன்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
470 ரன் இருக்க இது தேவையா?
இந்த நிலையில் இன்று மூன்றாவது நாளில் இந்திய கேப்டன் கில் மீண்டும் தற்காப்பாக சென்றது இந்திய அணிக்கு பின்னடைவுகளை உருவாக்கி இருப்பதாக இந்திய முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி விமர்சனத்தை முன் வைத்திருக்கிறார்.
இதையும் படிங்க : இந்தியாவுக்கு எதிராக அதிவேக சதம்.. இங்கிலாந்து வீரர் ஜெமி ஸ்மித் சாதனை.. ஒரே செஷனில் 172 ரன்கள்
இதுகுறித்து ரவி சாஸ்திரி பேசும்பொழுது ” நீங்கள் 470 ரன்கள் முன்னிலையில் இருக்கிறீர்கள். இப்படி இருக்கும் பொழுது நீங்கள் ஒரு கல்லி மற்றும் ஒரு ஸ்லிப் மட்டுமே வைத்துக் கொண்டிருக்கிறீர்கள். இது ஒரு தடுமாற்றமானதாக இருக்கிறது. இதை என்னால் நம்பவே முடியவில்லை” என்று விமர்சனம் செய்திருக்கிறார்.






