இந்தியாவுக்கு எதிராக அதிவேக சதம்.. இங்கிலாந்து வீரர் ஜெமி ஸ்மித் சாதனை.. ஒரே செஷனில் 172 ரன்கள்

0
93

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 84 ரன்களுக்கு ஐந்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில் ஹாரி புரூக் மற்றும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஜெமி ஸ்மித் ஆகியோர் அதிரடியாக விளையாடி பதிலடி கொடுத்திருக்கின்றனர்.

5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இங்கிலாந்து அணி ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த சூழலில் இந்திய அணியில் சுப்மன் கில் அபார ஆட்டத்தால் 587 ரன்கள் குவித்தது. இதனை அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி 84 ரன்களில் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

- Advertisement -

ஜெமி ஸ்மித் அதிரடி:

இதனால் இங்கிலாந்து அணி ஃபாலோ ஆணி தவிர்க்க போராடும் என இந்திய ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் யாருமே நினைக்காத வகையில் இங்கிலாந்து வீரர் ஜெமி ஸ்மித் மற்றும் ஹாரி புரூக் ஆகியோர் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர். இந்த ஜோடி குறுகிய நேரத்தில் 150 ரன்கள் பார்ட்னர்ஷிப் சேர்த்து விளையாடுகிறது.

குறிப்பாக ஜெமி ஸ்மித் இந்திய வீரர் பிரசித் கிருஷ்ணா வீசிய ஒரே ஓவரில் 23 ரன்கள் அடித்தார். இதில் நான்கு பவுண்டரிகளும், ஒரு சிக்ஸரும் அடங்கும். இதனை தொடர்ந்து அதிரடி காட்டிய ஸ்மித்தை கட்டுப்படுத்த முடியாமல் இந்திய வீரர்கள் தடுமாறினர். இதன் காரணமாக 80 பந்துகளில் ஜெமி ஸ்மித் சதம் அடித்தார். இதன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிராக அதிவேக சதம் அடித்த இங்கிலாந்து வீரர் என்று பெருமையை ஜெமி ஸ்மித் பெற்றார்.

- Advertisement -

அதிவேக சதம்:

ஒட்டு மொத்தமாக இந்தியாவிற்கு எதிராக நான்காவது அதிவேக சதம் அடித்த வீரர் என்ற பெருமையை ஜெமி ஸ்மித் பெற்றிருக்கிறார். டேவிட் வார்னர் 2012 ஆம் ஆண்டு 69 பந்துகளின் சதம் அடித்த நிலையில், டிவிலியர்ஸ் 2011 ஆம் ஆண்டு 75 பந்துகளிலும், 2006 ஆம் ஆண்டு சாகித் அப்ரிடி 78 பந்துகளிலும் அதிவேக சதம் அடித்துள்ளனர். தற்போது ஜெமி ஸ்மித் 80 பந்துகளில் சதம் அடித்துள்ளார்.

இதையும் படிங்க: 4,6,4,4,1,4  ஒரே ஓவரில் பிரசித் கிருஷ்ணா 23 ரன்கள்.. தொடரும் சொதப்பல்.. எதுக்கு அணியில் இருக்காருனே தெரியல

அது மட்டும் இல்லாமல் இந்தியாவிற்கு எதிராக சதம் அடித்த நான்காவது இங்கிலாந்து விக்கெட் கீப்பர் என்ற பெருமையும் ஜெமி ஸ்மித்துக்கு கிடைத்திருக்கிறது. அது மட்டும் இல்லாமல் 14 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்கு எதிராக சதம் அடித்த இங்கிலாந்து விக்கெட் கீப்பர் என்ற பெருமையும் அவருக்கு சேர்ந்துள்ளது. ஜெமி ஸ்மித் மற்றும் ஹாரி புரூக் ஜோடியின் அதிரடியாக விளையாட இங்கிலாந்து அணி ஒரே செஷனில் 172 ரன்களை சேர்த்து இருக்கிறது.

- Advertisement -