ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான தன்னுடைய பிளேயிங் லெவனை ரவி சாஸ்திரி அறிவித்திருக்கிறார்.
இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி பெர்த் மைதானத்தில் நவம்பர் 22ஆம் தேதி துவங்க இருக்கிறது. இரண்டு பெரிய அணிகள் மோதிக் கொள்கின்ற காரணத்தினால் இந்த டெஸ்ட் தொடருக்கு உலகம் முழுவதிலும் கிரிக்கெட் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
ரவி சாஸ்திரி துவக்க இடத்திற்கு கில்லை விரும்புகிறார். அபிமன்யு ஈஸ்வரன் ஆஸ்திரேலியா சூழ்நிலையில் சரியாக செயல்படாததால் அவரை வேண்டாம் என்றும், கேஎல் ராகுல் சிறப்பாக இருந்தால் அவரை துவக்க இடத்திற்கு அனுப்பலாம் இல்லையென்றால் அவரை மூன்றாவது இடத்தில் வைத்துக் கொள்ளலாம் என்கிறார்.
இதற்கு அடுத்து துருவ் ஜுரல் சிறப்பான முறையில் செயல்பட்டு இருக்கிறார், அவர் காட்டிய கேரக்டர் சிறப்பாக இருந்தது அவர் நேரடியாக அணியில் இருக்க வேண்டும் என்று வைத்திருக்கிறார். தொடர்ந்து வேகப்பந்துவீச்சு ஆல் ரவுண்டர் உடன் நான்கு வேகப்பந்துவீச்சாளர்கள் பெர்த் ஆடுகளத்தில் தேவையாக இருக்கிறது என்று கூறி இருக்கிறார்.
மேலும் பெர்த் சூழ்நிலையில் இரண்டு சுழல் பந்துவீச்சாளர்களை வைத்து செல்வது மிகவும் ஆடம்பரமானது என்றும், ஒரே ஒரு சுழல் பந்துவீச்சாளருக்குதான் தன்னுடைய அணியில் இடம் இருக்கும் என்றும், சிறப்பான பீல்டிங்கை கொண்டு வருவதால் அது ரவீந்திர ஜடேஜாவாக இருக்கலாம் அல்லது வாஷிங்டன் சுந்தரை வைத்துக் கொள்ளலாம் என்று கூறியிருக்கிறார்.
மற்றபடி அவருடைய அணியில் ஜெய்ஸ்வால், விராட் கோலி, விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் என பேட்டிங் யூனிட்டில் வழக்கமான வீரர்கள் தொடர்கிறார்கள். மேலும் கூடிய விரைவில் முகமது ஷமி இந்திய அணியில் இணைவது முக்கியம் என்றும் ரவி சாஸ்திரி அறிவுறுத்தி இருக்கிறார்.
இதையும் படிங்க : பங்களாதேஷ் டெஸ்ட்.. வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு.. முக்கிய நட்சத்திரம் அவுட்.. பெரிய ஃபாஸ்ட் பவுலிங் யூனிட் அமைப்பு
ரவி சாஸ்திரி இந்திய பிளேயிங் லெவன் :
ஜெய்ஸ்வால்
சுப்மன் கில்
கேஎல்.ராகுல்
விராட் கோலி
ரிஷப் பண்ட்
துருவ் ஜுரல்
ரவீந்திர ஜடேஜா இல்லை சுந்தர்
நிதிஷ் குமார் ரெட்டி
ஆகாஷ் தீப்
ஜஸ்பிரித் பும்ரா
முகமது சிராஜ்