இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தி 336 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
இந்த சூழ்நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் குல்தீப் யாதவை விட ரவிந்திர ஜடேஜாவுக்கு இந்திய நிர்வாகம் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதற்கான காரணம் குறித்து முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி சில முக்கியமான விஷயங்கள் பேசி இருக்கிறார்.
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வரும் இந்திய அணி முதலாவது டெஸ்ட் போட்டியில் தோல்வி அடைந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. முதலாவது டெஸ்ட் போட்டியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாத சுழற் பந்துவீச்சாளர் ரவீந்திர ஜடேஜாவுக்கு பதிலாக குல்தீப் யாதவ் சேர்க்கப்பட வேண்டும் என கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
இருப்பிடம் இந்திய அணி மீண்டும் ஜடேஜா மீது அதிக அளவு நம்பிக்கை வைத்து இரண்டாவது போட்டியிலும் களம் இறக்கியது. இந்த சூழ்நிலையில் பேட்டிங்கில் முதல் இன்னிங்ஸ் 89 ரன்கள் குவித்த ஜடேஜா இரண்டாவது இன்னிங்ஸிலும் 69 ரன்கள் குவித்து பேட்டிங்கில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார். இவரது சிறப்பான பேட்டிங் இந்திய அணி வெற்றி பெறுவதற்கு பெரிய அளவில் உதவியது. இது குறித்து ரவி சாஸ்திரி சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.
இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது ” இங்கிலாந்து நிலைமைகளில் இது போன்ற தட்டையான ஆடுகாலங்களில் விளையாடும் போது கட்டுப்பாட்டை கொடுத்து 30 முதல் 40 ரன்கள் எடுக்கக்கூடிய ஒரு சுழற் பந்துவீச்சு ஆல் ரவுண்டர் நிச்சயமாக தேவை. இந்த காரணத்தால் தான் ஜடேஜா குல்தீப் யாதவை விட முன்னதாக இந்திய அணிக்கு விளையாடுகிறார். மேலும் இந்த காரணத்தால் தான் வாஷிங்டன் சுந்தர் விளையாடியிருக்கிறார்.
இதையும் படிங்க:400 ரன்.. லாராவின் சாதனையை இதனால்தான் நான் உடைக்கல.. தென் ஆப்பிரிக்க கேப்டனின் பெருந்தன்மையை பாராட்டும் ரசிகர்கள்
இதுவே ஒரு டர்னிங் ட்ராக் என்றால் முழுமையான சுழற்சியாளர் தேவை. ஆனால் இது போன்ற தட்டையான ஆடுகளங்களில் பேட்டிங் தெரிந்த பந்துவீச்சாளர்கள் தேவைப்படுகிறார்கள்” என ரவி சாஸ்திரி பேசியிருக்கிறார். ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் தற்போது இந்திய அணி ஒரு போட்டியிலும், இங்கிலாந்து அணி ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ள நிலையில் மூன்றாவது போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில் வெற்றி பெற்று முன்னிலை பெற இரண்டு அணிகளும் போராடும் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.






