கேப்டன் பதவியில் இருந்து தோனி விலகுகிறார் எனில் ஏலத்திற்கு முன் ஏன் இதைச் செய்தீர்கள் ? சென்னை அணி செய்த பெரும் தவறைச் சுட்டிக் காட்டியுள்ள ரவி சாஸ்திரி

0
627
MS Dhoni and Ravi Shastri

கடந்த ஆண்டு வரை சென்னை அணியில் விளையாடி கொண்டிருந்தார் ஃபேப் டு பிளேசிஸ் தற்போது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டனாக விளையாடி வருகிறார். கடந்த ஆண்டு சென்னை அணி கோப்பையை கைப்பற்ற முக்கிய காரணமாக விளங்கியவர் ஃபேப் டு பிளேசிஸ்.

கடந்தாண்டு ஐபிஎல் தொடரில் 14 போட்டிகளில் மொத்தமாக 633 ரன்கள் குவித்து சென்னை அணி கோப்பையை வெல்ல மிக முக்கிய காரணமாக விளங்கினார். மீண்டும் சென்னை அணியில் இந்த ஆண்டு அவர் நிச்சயமாக விளையாடுவார் என்று சென்னை ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், பெங்களூர் அணி அவரை 7 கோடி ரூபாய்க்கு இன்று கைப்பற்றியது.

- Advertisement -

கைப்பற்றியது மட்டுமல்லாமல் பெங்களூரு அணியின் புதிய கேப்டனாக அவரை அறிவித்தது. தற்பொழுது பெங்களூர் அணிகள் மிக சிறப்பாக பேட்டிங் மற்றும் கேப்டன்ஷிப் பணியை ஃபேப் டு பிளேசிஸ் செய்து வருகிறார்.

புதிய கேப்டனாக களமிறங்கியுள்ள ரவிந்திர ஜடேஜா

மகேந்திர சிங் தோனி தலைமையில் இந்த ஆண்டு சென்னை அணி விளையாடும் என்று நினைத்த நிலையில், ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்பாக ஒரு அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியானது. இந்த ஆண்டு முதல் சென்னை அணியை ரவீந்திர ஜடேஜா தலைமை தாங்குவார் என்பதே அந்த அறிவிப்பு. அதன்படி ரவீந்திர ஜடேஜா தலைமையில் தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நடப்பு ஐபிஎல் தொடரில் விளையாடி வருகிறது.

முதல் நான்கு போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை நான்கு போட்டிகளிலும் தோல்வி அடைந்து அதிர்ச்சி அளித்துள்ளது. சென்னை அணி நிர்வாகம் ஒரு விஷயத்தை செய்திருக்க வேண்டும் என்று இந்திய முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி தற்போது கூறியுள்ளார்.

- Advertisement -
ஃபேப் டு பிளேசிஸ் கேப்டனாக விளையாடி இருக்க வேண்டும்

மகேந்திர சிங் தோனி இந்த ஆண்டு கேப்டனாக தொடரப் போவதில்லை என்று முன்பே அவர்கள் முடிவு செய்திருந்தால், கேப்டன்சி பொறுப்பை அவர்கள் ஃபேப் டு பிளேசிஸ்சிடம் கொடுத்திருக்க வேண்டும். ஜடேஜா எப்பொழுதும் போல ஒரு அதிரடி ஆல்ரவுண்டர் வீரராக விளையாடு இருக்க வேண்டும். அவரும் எந்தவித அழுத்தமும் என்று மிக சிறப்பாக விளையாடி இருந்திருப்பார்.

இந்த ஒரு விஷயத்தை சென்னை அணி நிர்வாகம் செய்து இருக்க வேண்டும் இதை கோட்டை விட்டு விட்டது என்று தற்பொழுது முந்திய முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி சாடியுள்ளார்