எனக்கு அந்த 3 பேர் இருக்க வரை கவலையில்ல.. கம்பீர் ஸார் இதை செய்ய சொல்லி இருக்கார் – ரவி பிஸ்னாய் பேட்டி

0
411
Gambhir

இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் கம்பீர் மற்றும் இந்திய டி20 அணியின் புதிய கேப்டன் சூரியகுமார் இருவருக்கும் 2026 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற இருக்கும் டி20 உலகக் கோப்பை தொடர் மிக முக்கியமானதாக இருக்கிறது. எனவே அதை நோக்கிய தயாரிப்புகளில் இப்போது இருந்தே ஈடுபட்டு இருக்கிறார்கள். இதில் ஒருவராக இருக்கும் ரவி பிஸ்னாய் அணியில் தனக்கு கிடைக்கும் ஆதரவு குறித்து பேசி இருக்கிறார்.

தற்போது இந்திய வெள்ளைப்பந்து அணிகளின் பிரதான சுழல் பந்துவீச்சாளராக குல்தீப் யாதவ் இருக்கிறார். அவருடைய இடத்திற்கு மாற்று சுழல் பந்துவீச்சாளராக ரவி பிஸ்னாய் பார்க்கப்படுகிறார். இதன் காரணமாக குல்தீப் யாதவுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு இவரை தற்பொழுது பெஞ்ச் வலிமைக்காக தயார் செய்து வருகிறார்கள்.

- Advertisement -

டி20 உலகக் கோப்பை தொடர் முடிந்ததும் வந்த ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடர் தற்பொழுது இலங்கைக்கு எதிரான டி20 தொடர் என ரவி பிஸ்னாய் தொடர்ந்து இந்திய கிரிக்கெட் நிர்வாகத்தின் ரேடாரில் இருந்து வருகிறார். இதற்கு முன்பாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் மிகச் சிறப்பாக செயல்பட்டிருந்தார். அத்தோடு டி20 பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் முதல் இடத்தையும் பிடித்திருந்தார்.

மேலும் ஐபிஎல் தொடரில் லக்னோ அணியில் கம்பீர் மென்டராக இருந்த இரண்டு ஆண்டுகள் ரவி பிஸ்னாய் அவருடன் இணைந்து பணி செய்து இருக்கிறார். மேலும் லக்னோ அணிக்கு மூன்று வீரர்களை ஏலத்திற்கு முன்பாக தக்க வைக்கலாம் எனும் பொழுது ரவி பிஸ்னாய் தக்கவைக்கப்பட்டிருந்தார். லக்னோ அணியின் உருவாக்கத்தில் முதன்மையானவராக இருந்த கம்பீர் ரவி பிஸ்னாயை அப்பொழுதே நம்பி ஆதரித்திருக்கிறார் என்பது உண்மை.

- Advertisement -

இதுகுறித்து ரவி பிஸ்னாய் கூறும் பொழுது “ஐபிஎல் தொடரில் லக்னோ அணியில் கம்பீர் ஸார் உடன் இரண்டு ஆண்டுகள் நான் நல்ல தொடர்பை கொண்டிருந்தேன். அவர் என்னுடைய விளையாட்டில் எதையும் மாற்றிக் கொள்ளும்படி கூறவில்லை. தற்போது நான் என்ன செய்து கொண்டிருக்கிறேனோ அதையே தொடர்ந்து செய்யச் சொல்லி இருக்கிறார். அவருடைய அறிவுரை எனக்கு முன்பு பயனுள்ளதாக இருந்தது தற்பொழுதும் அப்படியே இருக்கிறது.

இதையும் படிங்க : இந்தியாவில் ஆசிய கோப்பை 2025.. கோலி ரோகித் ஆட முடியாது.. வெளியான லேட்டஸ்ட் அப்டேட்

சூரியகுமார் எப்பொழுதும் கேப்டனாக மிகச் சிறப்பாக செயல்படுகிறார். அவருடைய தலைமையில் நான் ஆஸ்திரேலியா டி20 தொடரிலும் விளையாடி இருக்கிறேன். கில்லும் கேப்டன் பொறுப்பில் சிறப்பாகச் செயல்படுகிறார். அவருடைய தலைமையில் ஜிம்பாப்வே டி20 தொடரில் விளையாடி இருக்கிறேன். இவர்கள் என்னை ஆதரிக்க கூடியவர்களாக இருந்து வந்திருக்கிறார்கள். இப்படி இருக்கும் பொழுது நான் இதற்கு மேலும் வேறு எதுவும் கேட்க முடியாது” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -