10 ஓவருக்குள் 5 விக்கெட்ஸ் அள்ளிய அஸ்வின்; ஹர்பஜன் சிங் ரெக்கார்டை காலி பண்ணி புதிய ரெக்கார்ட்!

0
3312

பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளார் ரவிசந்திரன் அஸ்வின்.

இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் முதல் போட்டி நாக்பூர் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்று முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 177 ரன்களுக்கு சுருண்டது.

- Advertisement -

முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு ரோகித் சர்மா 120 ரன்கள், அக்சர் பட்டேல் 84 ரன்கள், ரவீந்திர ஜடேஜா 70 ரன்கள் அடித்து வலுவான ஸ்கொரை எட்ட உதவினர். முதல் இன்னிங்சில் 400 ரன்கள் அடித்து இந்திய அணி ஆல் அவுட். ஆனது. இதன் மூலம் 223 ரன்கள் முன்னிலையை பெற்றது.

அதன்பிறகு இரண்டாவது இன்னிசை விளையாடிய ஆஸ்திரேலியா அணி, இந்திய சுழல் பந்துவீச்சாளர்களின் தாக்குதலை கட்டுப்படுத்த முடியாமல் அடுத்தடுத்து விக்கெடுகளை இழந்து தடுமாறினர். குறிப்பாக ரவிச்சந்திரன் அஸ்வின் சிறப்பான ரிதம் வைத்து பந்துவீசி வந்தார்.

அஷ்வினுக்கு மளமளவென விக்கெட்டுகள் விழுந்தன. இவர் வெறும் 9.2 ஓவர்கள் வீசி 34 ரன்கள் மட்டுமே கொடுத்து ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 31வது முறையாக ஒரு இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

- Advertisement -

அஸ்வின் சாதனை

இந்திய மண்ணில் 25வது முறையாக 5 விக்கெட் கைப்பற்றி லெஜன்ட் அனில் கும்ப்ளேவின் சாதனையை அஸ்வின் சமன் செய்தார். மேலும் பார்டர் கவாஸ்கர் தொடரில் ரவிச்சந்திரன் அஸ்வின் புதிய சாதனை படைத்திருக்கிறார்.

அதாவது, ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட் வீழ்த்திய இந்திய வீரர்கள் மத்தியில் ஹர்பஜன் சிங் சாதனையை முறியடித்து, தற்போது இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். முதல் இடத்தில் அணில் கும்ப்ளே இருக்கிறார்.

பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் அதிக விக்கெட் வீழ்த்திய இந்திய பவுலர்கள்:

  1. அணில் கும்ப்ளே – 111 விக்கெட்டுகள்
  2. அஸ்வின் – 97 விக்கெட்டுகள்
  3. ஹர்பஜன் சிங் – 95 விக்கெட்டுகள்.