இந்தியாவுடன் ஃபைனல் வந்தால் பாகிஸ்தான் விளையாட கூடாது.. நாம யாருனு காட்டணும் – ரஷித் லத்திப் பேட்டி

0
10

டி20 உலகக் கோப்பை பைனலில் இந்தியாவுடன் விளையாட வேண்டி வந்தால் பாகிஸ்தான் விளையாடக்கூடாது என பாகிஸ்தான் முன்னாள் வீரர் ரஷீத் லத்திப் கூறியிருக்கிறார்.

இந்த டி20 உலகக் கோப்பை தொடரை பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம் புறக்கணித்து இருக்கிறது. இந்த நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும் புறக்கணிக்க வேண்டும் என ரஷீத் லத்தீப் ஆரம்பம் முதல் சொல்லி வந்தார்.

- Advertisement -

பாகிஸ்தான் ஆதரவு

தங்களுடைய டி20 உலகக்கோப்பை போட்டிகளை வெளிநாட்டுக்கு மாற்ற வேண்டும் இந்தியாவிற்கு வர முடியாது என பங்களாதேஷ் ஐசிசி அமைப்பிடம் கோரிக்கை வைத்தது. அதற்கு ஐசிசி அமைப்பு ஓட்டெடுப்பு நடத்தியது. இந்த ஓட்டெடுப்பில் பங்களாதேஷ்க்கு ஆதரவாக பாகிஸ்தான் வாக்களித்திருந்தது.

அதேசமயத்தில் டி20 உலகக் கோப்பை தொடரில் பங்கேற்பது குறித்து அறிவிக்காமல் தாமதப்படுத்தி குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது. ஆனால் பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் பலர் பாகிஸ்தான் கட்டாயம் டி20 உலகக் கோப்பையில் விளையாட வேண்டும் என்று கூறி வருகிறார்கள். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும் கட்டாயம் பங்கேற்கும் என்று தெரிகிறது.

- Advertisement -

பைனல் விளையாடக்கூடாது

இது குறித்து ரஷீத் லத்திப் கூறும்பொழுது “நாங்கள் இந்திய அணிக்கு எதிராக விளையாட மாட்டோம் என எங்களுடைய அரசாங்கம் சொன்னால் அதை ஐசிசி ஏற்றுக்கொள்ள வேண்டும். அவர்கள் ஒப்புக் கொள்ளவில்லை என்றால் அங்குதான் உண்மையான பிரச்சினை ஆரம்பிக்கிறது”

இதையும் படிங்க : கடந்த கால வெற்றியில் அர்த்தம் இல்லை.. டி20 உலக கோப்பையில் இந்தியா இதை செய்யணும் – கங்குலி அறிவுரை

“ஒருவேளை இரண்டு அணிகளும் ஃபைனல் வந்தால் கூட பாகிஸ்தான் விளையாட கூடாது. நாம் வேலை நிறுத்தத்தை செய்யும் நேரம் வந்துவிட்டது. இரும்பு சூடாக இருக்கும் பொழுதே வேட்டையை ஆரம்பிக்க வேண்டும். நாம் உலகக் கோப்பை தொடரை புறக்கணிப்பதாக இருந்தால் முன்பே செய்திருக்க வேண்டும். இப்போது அதை செய்யக்கூடாது. அதற்கு பதிலாக இந்திய அணியுடன் விளையாட கூடாது” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -