டி20 உலகக் கோப்பை 2024

கோலி மட்டும் சரியா?.. இது உலக கோப்பையே கிடையாது.. பாகிஸ்தான குறை சொல்றத நிறுத்துங்க – ரஷீத் லத்திப் பேட்டி

ஐசிசி ஒன்பதாவது டி20 உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி முதல் சுற்றுடன் வெளியேறிவிட்டது. இதன் காரணமாக பாகிஸ்தான் அணி மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் மீது கடுமையான விமர்சனங்கள் வெளியில் இருந்து வந்து கொண்டிருக்கிறது. ஆனால் பாகிஸ்தான் அணியை விமர்சனம் செய்யக்கூடாது என பாகிஸ்தான் முன்னாள் வீரர் ரஷீத் லத்திப் கூறியிருக்கிறார்.

- Advertisement -

இன்று பாகிஸ்தான் அணி தன்னுடைய கடைசிப் போட்டியில் அயர்லாந்து அணிக்கு எதிராக விளையாட இருக்கிறது. அமெரிக்கா மற்றும் இந்திய அணிகளிடம் தோல்வி அடைந்த நிலையில் கனடா அணியிடம் வெற்றி பெற்றது. மேலும் இன்று அயர்லாந்துக்கு எதிரான போட்டி மலையின் காரணமாக நடைபெறுமா? என்பதும் சந்தேகமாக இருக்கிறது.

பாகிஸ்தான் அணியை பொறுத்தவரையில் பந்துவீச்சை விட பேட்டிங் மிகவும் சுமாராக இருந்தது. அதே சமயத்தில் பந்து வீச்சும் அமெரிக்க அணிக்கு எதிராக சுமாராக இருந்தது. வந்து வீழ்ச்சிக்கு சாதகமான நியூயார்க் ஆடுகளத்தில் மட்டுமே பாகிஸ்தான் பந்து வீச்சு தாக்கத்தை உண்டாக்கக் கூடியதாக காணப்பட்டது.

பாகிஸ்தான் அணியின் பிளேயிங் லெவனில் இமாத் வாசிம் மற்றும் சதாப் கான் என இரண்டு சுழல் பந்து வீச்சு ஆல்ரவுண்டர்களை வைத்து விளையாடும் அளவுக்கு, அவர்களிடம் சரியான பேட்ஸ்மேன்கள் பற்றாக்குறை இருந்தது குறிப்பிடத்தக்கது. அவர்களின் பேட்டிங்தான் அவர்களை இந்த உலகக் கோப்பை தொடரை விட்டு வெளியேற்றி விட்டது.

- Advertisement -

இதுகுறித்து பேசியிருக்கும் ரஷீத் லத்திப் கூறும் பொழுது “எல்லாவற்றுக்கும் பாகிஸ்தான் வீரர்களை மட்டுமே குறை சொல்ல முடியாது. அவர்களும் முடிந்த வரையில் போராடினார்கள். ஆனால் அவர்களின் முயற்சிகள் எல்லாம் ஆடுகளத்தின் கண்டிஷன் காரணமாக வீணாகப் போனது. பாகிஸ்தான் அணி அமெரிக்கா மற்றும் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்று இருக்க வேண்டும். ஆனால் கண்டிஷன்கள் நம் கையில் கிடையாது. எனவேஎதுவும் நடக்கலாம். முடிந்தவரையில் பாகிஸ்தான் பேட்ஸ்மேன் ரன்கள் எடுத்திருக்கலாம். ஆனால் சிறந்த பேட்ஸ்மேன் விராட் கோலியால் கூட இங்கு ரன் எடுக்க முடியவில்லை.

இதையும் படிங்க : 180 ரன்.. இங்கிலாந்தை காப்பாற்றிய ஹெட் ஸ்டோய்னிஸ் ஜோடி.. ஆஸ்திரேலியா ஸ்காட்லாந்து அணியை வென்றது

மேலும் தனிநபர் அரைசதங்கள் கூட அதிகம் அடிக்கப்படவில்லை. ஆப்கானிஸ்தான் போன்ற ஒரு அணிக்கு எதிராக ஒருவர் கூட அரைசதம் அடிக்க வில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ரிஷப் பண்ட் அடித்த 42 ரன்கள்தான் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இப்படியான கண்டிஷன்கள் உலகக் கோப்பைக்கு ஏற்றதே கிடையாது” என்று கூறியிருக்கிறார்.

Published by