டி20 உலகக் கோப்பை 2024

343 ரன்.. கோலி ரோகித் சாதனையை தவறவிட்ட மந்தனா.. ஆனா வேற ஒரு மாஸ் ரெக்கார்ட்.. தெ.ஆ வொயிட் வாஷ்

தென் ஆப்பிரிக்கா பெண்கள் கிரிக்கெட் அணி மூன்று வடிவ கிரிக்கெட் தொடர்களிலும் விளையாடுவதற்கு இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் செய்திருக்கிறது. இன்று மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் மூன்றாவது மற்றும் கடைசிப் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியிலும் வென்று தொடரை இந்திய அணி 3-0 எனக் கைப்பற்றியது.

- Advertisement -

இந்த போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தென் ஆப்பிரிக்க அணிக்கு முதல் விக்கெட்டுக்கு 102 ரன்கள் பார்ட்னர்ஷிப் கிடைத்தது. தென் ஆப்பிரிக்கா அணியின் துவக்க வீராங்கனைகள் கேப்டன் வோல்வார்ட் 57 பந்தில் 61 ரன்கள், டஸ்மின் பிரிட்ஸ் 66 பந்துகளில் 38 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்கள்.

இதற்கு அடுத்து கீழ் வரிசையில் இருந்து பெரிய அளவில் ரன் பங்களிப்பு வரவில்லை. அதிகபட்சமாக நடினே டி கிளேர்க் 46 பந்தில் 26 ரன்கள், ரிட்டர் 31 பந்தில் 26 ரன்கள் எடுத்தார்கள். 50 ஓவர்கள் முடிவில் தென் ஆப்பிரிக்க அணி எட்டு விக்கெட் இழப்புக்கு 215 ரன்கள் எடுத்தது. இந்திய தரப்பில் பந்துவீச்சில் அருந்ததி ரெட்டி மற்றும் தீப்தி சர்மா இருவரும் தலா இரண்டு விக்கெட் கைப்பற்றினார்.

இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணிக்கு துவக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா 83 பந்தில் 90 ரன்கள், கேப்டன் ஹர்மன்பிரித் கவுர் 48 பந்தில் 42 ரன்கள். செபாலி வர்மா 39 பந்தில் 25 ரன்கள், பிரியா பூனியா 40 பந்தில் 28 ரன்கள் எடுத்தார்கள். முடிவில் இந்திய அணி 40.4 ஓவரில் இலக்கை எட்டி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

- Advertisement -

மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் இரண்டு போட்டிகளையும் இந்திய அணியை வெற்றி பெற்று இருந்தது. இந்த நிலையில் மூன்றாவது போட்டியையும் வென்று ஒருநாள் தொடரை 3-0 எனக்கு கைப்பற்றி தென் ஆப்பிரிக்க அணியை வொயிட் வாஷ் செய்திருக்கிறது.

இதையும் படிங்க : ஆஸி கேப்டன் பேச்சுக்கு.. நாளை பழி தீர்க்குமா இந்திய அணி?.. உத்தேச பிளையிங் லெவன்.. 1 மாற்றம் அவசியம்

மேலும் இந்தத் தொடரில் ஸ்மிருதி மந்தனா 117, 136 இரண்டு சதங்கள் அடித்து இருந்தார். இன்றைய போட்டியில் 90 ரன்கள் எடுத்து தொடர்ச்சியான மூன்றாவது சதத்தை தவறவிட்டார். இந்திய கிரிக்கெட்டில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா மட்டுமே தொடர்ந்து மூன்று சதங்கள் அடித்திருக்கிறார்கள். அவர்களது சாதனையை எட்டயிருந்த வாய்ப்பை ஸ்மிருதி மந்தனா 10 ரன்னில் தவறவிட்டார். மூன்று போட்டிகளிலும் 343 ரன்கள் குவித்து, மூன்று ஒரு நாள் போட்டி தொடரில் அதிக ரன்கள் குவித்த ஆசிய வீராங்கனை என்ற பிரம்மாண்ட சாதனையை படைத்திருக்கிறார்.

Published by