பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் யூனிஸ் கான் மென்டராக ஆப்கானிஸ்தான் அணிக்கு வேலை செய்ய ஒத்துக் கொண்டு, பாகிஸ்தான் அணிக்கு ஏன் உதவி செய்யவில்லை? என பாகிஸ்தான் முன்னால் வீரர் ரஷீத் லத்திப் கூறியிருக்கிறார்.
தற்போது ஆப்கானிஸ்தான் அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இங்கிலாந்து அணியை வென்று அரையிறுதிக்கான வாய்ப்பை தக்க வைத்திருக்கிறது. இன்று ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக நடைபெறும் போட்டியில் வெற்றி பெற்றால் ஆப்கானிஸ்தான அணி அரையிறுதிக்கு தகுதி பெற்று விடும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி நிர்வாகம் ஐசிசி தொடர்களுக்கு ஒரு சிறப்பான வியூகத்தை தொடர்ந்து செய்து வருகிறது. 2023 ஆம் ஆண்டு இந்தியாவில் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரை விளையாடுவதற்காக இந்திய முன்னாள் வீரர் அஜய் ஜடேஜாவை மென்டராக நியமித்துக் கொண்டது. இதற்காக அஜய் ஜடேஜா பணம் ஏதும் வேண்டாம் என்று கூறிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் 2024 வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்ற டி20 உலக கோப்பை தொடருக்கு அந்த நாட்டின் நட்சத்திர ஆல்ரவுண்டர் பிராவோவை பந்துவீச்சு பயிற்சியாளராக நியமித்துக் கொண்டது. தற்பொழுது பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி தொடரை விளையாடுவதற்காக பாகிஸ்தானுக்கு டி20 உலக கோப்பையை வென்ற முன்னாள் கேப்டன் யூனுஸ் கானை மென்டராக நியமித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இது ஆப்கானிஸ்தான் அணிக்கு ஐசிசி தொடர்களில் நல்ல தாக்கத்தை கொடுத்து வருகிறது.
தற்போது ஆப்கானிஸ்தான் அணிக்கு மென்டராக செயல்பட்டு வரும் யூனிஸ் கான் பாகிஸ்தான் அணியுடன் இணைந்து சாம்பியன் டிராபிக் தொடரில் செயல்படாததற்கான காரணம் குறித்து பாகிஸ்தான் முன்னாள் வீரர் ரஷீத் லத்தீப் மிக முக்கியமான விஷயம் ஒன்றை வெளிப்படுத்தி இருக்கிறார்.
இதையும் படிங்க : நியூசியுடன் முதல் முறையாக கில் கேப்டன்.. ரிஷப் பண்ட்க்கு வாய்ப்பு.. என்ன காரணம்? – வெளியான செய்திகள்
“ஆப்கானிஸ்தான் அணி உடன் இணைந்து பணியாற்றுவதற்காக பாகிஸ்தான் கிரிக்கெட் அழைப்பை யூனிஸ்கான் மறுத்துவிட்டார். ஏனென்றால் பாகிஸ்தானுக்கு வேலை செய்தால் பெரிய பணம் ஏதும் கிடைக்காது. அதே சமயத்தில் ஆப்கானிஸ்தான் அணிக்கு வேலை செய்தால் பணம் கிடைக்க வாய்ப்புகள் உண்டு” என்று கூறியிருக்கிறார். தற்போது இந்த விஷயம் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.