நியூசியுடன் முதல் முறையாக கில் கேப்டன்.. ரிஷப் பண்ட்க்கு வாய்ப்பு.. என்ன காரணம்? – வெளியான செய்திகள்

0
644
Gill

நடப்பு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு ஓய்வு கொடுக்கப்படலாம் என்கின்ற அதிரடியான செய்தி வெளியாகியிருக்கிறது. இது குறித்தான காரணம் இந்திய ரசிகர்களுக்கு கவலை அளிப்பதாக அமைந்திருக்கிறது.

இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நியூசிலாந்து மற்றும் இந்திய அணிகள் லீக் சுற்றில் தங்கள் கடைசி போட்டியில் மார்ச் இரண்டாம் தேதி துபாய் சர்வதேச மைதானத்தில் மோதிக்கொள்ள இருக்கின்றன. இரண்டு அணிகளும் ஏற்கனவே அரையிறுதிக்கு தகுதி பெற்று விட்ட காரணத்தினால் இந்தப் போட்டி சம்பிரதாய போட்டியாகவே அமைகிறது.

- Advertisement -

மிக முக்கியமான போட்டி

இரண்டு அணிகளும் ஏற்கனவே அரையிறுதிக்கு தகுதி பெற்று அடுத்த போட்டி சம்பிரதாய போட்டியாக நடந்தாலும் கூட, இரண்டு அணிகளும் இதே துபாய் மைதானத்தில் இறுதிப்போட்டியில் மோதி கொள்வதற்கான வாய்ப்புகளும் இருக்கின்றன. எனவே இந்த போட்டியில் தாங்கள் ஏதாவது மாற்றங்கள் செய்ய வேண்டியது இருக்குமா? என்பது குறித்து இரண்டு அணிகளுமே பரிசோதனை செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றன.

இந்த வகையில் இந்த போட்டி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இரண்டு அணிகளுக்கும் மாறுகிறது. ஏற்கனவே இந்திய அணியில் இரண்டு மாற்றங்கள் பவுலிங் யூனிட்டில் இருக்கலாம் என்று பேசப்பட்டு வந்த நிலையில், தற்போது ரோகித் சர்மாவும் விளையாட மாட்டார் என்கின்ற செய்தி வந்திருக்கிறது.

- Advertisement -

ரோகித் சர்மா நிலவரம் என்ன?

இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பயிற்சி என்பது கொஞ்சம் காயம் அடைந்ததாக செய்திகள் கூறியிருந்தன. இதனால் அவர் விஷயத்தில் அதிக ரிஸ்க் எடுக்க விரும்பாத இந்திய அணி நிர்வாகம் அவருக்கு நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டிக்கு ஓய்வு கொடுக்கும் என்று செய்திகள் வெளியாகியிருக்கிறது. மேலும் அவருக்கு பதிலாக ரிஷப் பண்ட் விளையாடுவார் என்றும் செய்திகள் கூறுகிறது.

இதையும் படிங்க : இந்தியாவின் ஷாகித் அப்ரிடி அபிஷேக் ஷர்மா.. அவருக்கு ஒரு அட்வைஸ் சொல்லி இருக்கேன் – வாசிம் அக்ரம் பேட்டி

இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா இல்லாத நிலையில் துணை கேப்டன் கில் அணியின் கேப்டனாக பொறுப்பேற்பார் என்று கூறப்படுகிறது. மேலும் ரோகித் சர்மா மீண்டும் திரும்பி வந்துவிடுவார் என்றால், பேட்டிங் யூனிட் வரிசையை கலைக்காமல் துவக்க வீரராகவே ரிஷப் பண்ட் களம் இறக்கப்படலாம் என்றும் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -