எங்க பாகிஸ்தான் கிரிக்கெட் அழிய காரணம் ஐபிஎல்தான்.. இந்த சம்பவங்கள பாருங்க – ரஷீத் லத்திப் பேட்டி

0
22
Rashit

தற்போது பாகிஸ்தான் கிரிக்கெட் அறிவுக்கு மிக முக்கிய காரணமாக ஐபிஎல் தொடர் இருந்து வருவதாக பாகிஸ்தான் முன்னாள் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் ரசீத் லத்தீப் கடுமையாக குற்றம் சாட்டி இருக்கிறார்.

2008 ஆம் ஆண்டுக்கு பிறகு பாகிஸ்தான் வீரர்கள் யாரும் ஐபிஎல் தொடரில் பங்கேற்பதற்கு இந்திய கிரிக்கெட் வாரியமும் இந்திய அரசும் அனுமதிக்கவில்லை. அப்போதிருந்து இப்போது வரையில் பாகிஸ்தான் வீரர்கள் ஐபிஎல் தொடருக்குள் நுழைய முடியாமல் இருந்து வருகிறார்கள். இது அவர்களுக்கு பல வகைகளில் பின்னடைவாக அமைந்திருக்கிறது.

- Advertisement -

எல்லோரும் நிறைய கற்றுக் கொள்கிறார்கள்

ஐபிஎல் தொடரில் பாகிஸ்தான் வீரர்கள் விளையாடாத காரணத்தினால், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கும் வருமான ரீதியாக இழப்பு இருக்கிறது. அதைவிட முக்கிய இழப்பாக ஐபிஎல் தொடரில் பல வீரர்களுடன் இணைந்து பல விஷயங்களை கற்றுக் கொள்ளும் வாய்ப்பை இழப்பதுதான் பெரிதாக அமைகிறது.

இதுகுறித்து ரசீத் லத்தீப் பேசும்பொழுது ” நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற நாடுகளை பாருங்கள், அவர்களுடைய சிறந்த வீரர்கள் எங்கிருக்கும் சிறந்த வீரர்களுடன் வந்து விளையாடிய அனுபவம் கொண்டிருக்கிறார்கள். உங்களிடம் கம்மின்ஸ் ரபாடா ஆச்சர் போன்ற சிறந்த பந்துவீச்சாளர்கள் பந்து வீசுகிறார்கள். நீங்கள் இதனால் உயர்தர வசதியுடன் உயர்தரத்தில் கற்றுக் கொள்ள முடிகிறது”

- Advertisement -

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் கூட வளர்ந்து விட்டது

“நீங்கள் கால்பந்து பற்றி பேசும் பொழுது ரியல் மாற்றி பார்சிலோனா பற்றி அதிகம் பேசுகிறீர்கள். ஏனென்றால் அவைகள் பெரிய உயர்தர வசதிகள் கொண்ட அணிகளாக இருக்கின்றன. அதை விட்டு வெளியேற எந்த வீரர்களும் விரும்புவதில்லை. எனவே ஐபிஎல் போன்ற உயர்தர லீக்கில் நீங்கள் விளையாடும் பொழுது, வெளியில் சென்று எங்கும் உங்களால் சிறப்பாக விளையாட முடிகிறது “

இதையும் படிங்க : நான் தோனியை குறைச்சி எடை போடமாட்டேன்.. அவர் இன்னமும் இந்த 2 விஷயத்துல கில்லிதான் – ரிக்கி பாண்டிங் கருத்து

“ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் எழுச்சியில் ஐபிஎல் தொடரின் பங்கும் இருக்கிறது. ஐபிஎல் தொடரில் ரஷித் கானுக்கு பிறகு நூர் அகமத், அஸமத்துல்லாஹ் ஓமர்சாய் மற்றும் பஸருல்லா ஃபரூக்கி ஆகியோரை அழைத்து வந்தார்கள். உடனடியாக அந்த வீரர்கள் தங்களுடைய தேசிய அணிக்கும் அதிரடியான தாக்கத்தை ஏற்படுத்தினார்கள். ஐபிஎல் தொடரில் பாகிஸ்தான் வீரர்கள் விளையாட முடியாதது பெரிய பின்னடைவை உருவாக்கி இருக்கிறது” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -