இது ஆரம்பம்தான்.. நாங்க கடினமா உழைச்சி திரும்பி வருவோம்.. இந்த ஒரு விஷயம் துரதிஷ்டமா அமைஞ்சிடுச்சு – ரஷித் கான் பேட்டி

0
216
Rashid

இன்று டி20 உலகக்கோப்பை தொடரின் முதல் அரையிறுதி போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதிக்கொண்டன. இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணியிடம் 56 ரன்களுக்கு சுருண்டு ஆப்கானிஸ்தான் அணி தோல்வி அடைந்தது. இந்தத் தோல்வி குறித்து ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் ரஷித் கான் பேசியிருக்கிறார்.

இந்த போட்டிக்கான ஆடுகளம் பந்துவீச்சுக்கு மிக சாதகமாக இருந்தது. இவர்களில் ஆப்கானிஸ்தான் அணி வெரும் 56 ரன்கள் மட்டும் எடுத்து சுருண்டது. இதைத் தொடர்ந்து விளையாடிய தென் ஆப்பிரிக்கா 8.5 ஓவரில் ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து இலக்கை எட்டி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

- Advertisement -

இந்த போட்டியின் தோல்விக்கு பிறகு பேசிய ஆப்கானிஸ்தான் கேப்டன் ரஷீத் கான் “இது ஒரு அணியாக இந்த தோல்வி எங்களுக்கு கடினமாக இருக்கிறது. நாங்கள் இன்னும் சிறப்பாக செய்திருக்கலாம். ஆனால் நாங்கள் விரும்பியதை செய்ய கண்டிஷன் அனுமதிக்கவில்லை. அதே சமயத்தில் டி20 கிரிக்கெட் என்றால் இப்படித்தான். நீங்கள் எல்லா கண்டிஷனுக்கும் தயாராக இருக்க வேண்டும். அவர்கள் மிகவும் நன்றாக பந்து வீசினார்கள் என நான் நினைக்கிறேன்.

இந்த உலகக் கோப்பை தொடரில் வேகப்பந்துவீச்சாளர்கள் எங்களுக்கு சிறப்பாக செயல்பட்டார்கள். அதன் காரணமாக நாங்கள் வெற்றி பெற்றோம். எப்பொழுதும் உங்களுக்கு நல்ல தொடக்கங்கள் தேவை. முஜீப் காயம் எங்களை துரதிஷ்டவாதிகளாக மாற்றியது. ஆனால் எங்கள் வேகப் பந்துவீச்சாளர்கள் மற்றும் முகமது நபி கூட புதிய பந்தில் சிறப்பாக பந்து வீசினார்கள். இது மிடில் ஓவர்களில் ஸ்பின்னர்கள் எங்களுக்கு வேலையை எளிதாக்கியது. தென் ஆப்பிரிக்கா போன்ற பெரிய அணியிடம் தோல்வி அடைந்ததை நாங்கள் ஏற்றுக் கொள்வோம்.

- Advertisement -

இது எங்களுக்கு ஆரம்பம்தான். எங்களால் எந்த அணியையும் வெல்ல முடியும் நம்பிக்கை இருக்கிறது. எங்களுக்கு ஒரு நல்ல கற்றல் அனுபவமாக இந்தத் தொடர் இருந்தது. இதிலிருந்து நாங்கள் நம்பிக்கையை மட்டும் எடுத்துக் கொள்கிறோம். எங்களிடம் திறமைகள் இருப்பதை நாங்கள் அறிவோம். ஆனால் அழுத்தம் நிறைந்த கடினமான நேரங்களை சமாளிப்பது பற்றியது.

இதையும் படிங்க : 10 பேர் ஒற்றை இலக்கம்.. 8 ஓவரில் முடிந்த ஆப்கான் கனவு.. தெ.ஆ முதல் முறையாக பைனலுக்கு தகுதி

நாங்கள் சில வேலைகளை செய்ய வேண்டும். மிடில் ஆர்டரில் நன்றாக விளையாடி போட்டியை ஆழமாக எடுத்துச் செல்ல வேண்டும். நான் முன்பே சொன்னது போல எங்களுக்கு இது ஒரு கற்றல் தொடராக இருக்கிறது. நாங்கள்இதுவரை நல்ல முடிவுகளை அடைந்திருக்கிறோம். அதே சமயத்தில் நாங்கள் இன்னும் கடுமையாக உழைத்து மீண்டும் வருவோம் குறிப்பாக பேட்டிங்கில்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -