ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டனும், முன்னணி சுழற்பந்து வீச்சாளருமான ரஷித் கான், ஆடவருக்கான டி20 சர்வதேச போட்டிகளில் அதிக விக்கெட் எடுத்த வீரர் என்ற சாதனையை படைத்தார். சர்ஜாவில்நடந்த ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தனது நான்கு ஓவர்களில் 11 ரன்கள் விட்டு கொடுத்து 3 விக்கெட் எடுத்ததன் மூலம் இந்த சாதனை அவருக்கு சொந்தமானது.
இதன் மூலம் ஆப்கானிஸ்தானின் 38 ரன்கள் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். இந்த விக்கெட்டுகளுடன், முன்னாள் நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுதியை முந்தி, ரஷித் 165 டி20 விக்கெட்டுகளுடன் இந்த அதிக விக்கெட் எடுத்தவராக உயர்ந்தார்.
அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியல்:
ரஷித்தின் கடைசி பந்தில், துருவ் பராஷரின் பேட்டில் பந்து எட்ஜாகி, அதைனை முகமது இஷாக் கேட்ச் பிடித்தபோது இந்த சாதனை படைக்கப்பட்டது. முன்னதாக, அவர் ஈதன் டி’சோசா மற்றும் ஆசிஃப் கானை வீழ்த்தினார் இதில் ஆசிஃப் கானின் விக்கெட் அவரை சவுதி சாதனையை சமன் செய்ய உதவியது.
டி20 சர்வதேசத்தில் அதிக விக்கெட் எடுத்தவர்கள் வரிசை
வீரர் பட்டியலில் ரஷித் கான் 165 விக்கெட்டு உடன் முதலிடத்திலும், டிம் சவுதி 164 விக்கெட்டுடன் 2வது இடத்திலும், இஷ் சோதி 150 விக்கெட்டுடன் 3வது இடத்திலும், ஷகிப் அல் ஹசன் 149 விக்கெட்டுடன் 4வது இடத்திலும், முஸ்தபிசுர் ரஹ்மான் 142 விக்கெட்டுடன் 5வது இடத்திலும் உள்ளனர்.
புள்ளி பட்டியல்:
இதனிடையே ஆப்கானிஸ்தானின் வெற்றி, அந்த அணியின் பேட்டர்களால் தன்வசமானது. இப்ராகிம் சத்ரான் மற்றும் செதிகுல்லா அட்டால் இடையேயான 84 ரன்கள் பார்ட்னர்ஷிப் வலுவான பேட்டிங் அடித்தளத்தை அமைத்தது. சத்ரான் 40 பந்துகளில் 63 ரன்கள் எடுத்து சிறப்பாக ஆடினார்.
இதையும் படிங்க: ரோகித் ரிஷப் பண்ட் ரெண்டு பேரும் ரத்தினங்கள்.. எனக்கு ஒரே மாதிரி செஞ்சத மறக்க மாட்டேன் – கலீல் அகமத் பேட்டி
கரீம் ஜனத் மற்றும் அஸ்மதுல்லா உமர்ஜாய் ஆகியோர் மூன்று ஓவர்களில் 49 ரன்கள் சேர்த்து, ஆப்கானிஸ்தானை 188 என்ற ஸ்கோரை எட்ட உதவியது. உயர்த்தியது. ஆப்கானிஸ்தான், யுஏஇ மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கும் இடையிலான முத்தரப்பு தொடரில் தற்போது 4 புள்ளிகளுடன் பாகிஸ்தான் முதலிடத்திலும், ஆப்கானிஸ்தான் 2வது இடத்திலும் உள்ளது.






