இந்திய அணியில் நட்சத்திர வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் ரிஷப் பண்ட் இருவரும் வீரர்கள் விஷயத்தில் ஒரே மாதிரி நடந்து கொள்வதாகவும், தன்னிடமும் இருவரும் அப்படி நடந்து கொண்டார்கள் என சிஎஸ்கே அணிக்காக விளையாடி வரும் கலீல் அகமத் தெரிவித்திருக்கிறார்.
இந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கு சிஎஸ்கே அணிக்காக கலீல் அகமத் வாங்கப்பட்டார். மேலும் இந்த ஆண்டு சிஎஸ்கே அணிக்கு மோசமாக அமைந்த போதிலும் தொடர் முழுவதும் சிறப்பாக கலீல் அகமத் மட்டும் ஒரே வீரராக செயல்பட்டிருந்தார்.
இந்திய அணியில் நழுவிய வாய்ப்பு
இந்திய கிரிக்கெட்டில் ஜாகிர் கானுக்கு பிறகு சிறந்த இடதுகை வேகப் பந்துவீச்சாளர்கள் இதுவரையில் கிடைக்காமல் இருந்து வருகிறார்கள். அர்ஸ்தீப் சிங் இருந்தபோதிலும் அவர் மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் விளையாட கூடியவராக இல்லை.
இந்த நிலையில் கலில் அகமத் மணிக்கு 140 கிலோ மீட்டர் வேகத்தில் இடது கையால் வீசுவதால் அவருக்கு இந்திய கிரிக்கெட்டில் பிரகாசமான எதிர்காலம் இருந்தது. ஆனாலும் சர்வதேச மட்டத்தில் அவரது செயல்பாடுகள் சிறப்பாக இல்லாத காரணத்தினால் தனக்கு கிடைத்த வாய்ப்பை இழந்துவிட்டார்.
இருவரும் ஒரேமாதிரிதான்
இது குறித்து கலில் அகமத் பேசும்போது “எனக்கு ஒரு போட்டியில் சிறந்த நாளாக அமையவில்லை. அப்போது மைதானத்தை விட்டு வீரர்கள் எல்லோரும் வெளியேறி கொண்டு இருந்தார்கள். ஆனால் என்னுடன் பேசுவதற்காக ரோஹித் சர்மா காத்துக் கொண்டிருந்தார். என்னுடைய திறமையைப் பற்றி நான் இன்னும் புரிந்து கொள்ளவில்லை என்று சொன்னார். அப்போது அவரைப் பார்த்த ரசிகர்கள் அவர் பெயர் சொல்லி அழைத்தார்கள். இதேபோல ரசிகர்கள் என் பெயரை சொல்லியும் அழைக்க வேண்டும் என்று நான் விரும்ப வேண்டுமென சொன்னார்”
இதையும் படிங்க: மீண்டும் இந்திய கிரிக்கெட்டில் நுழையும் ராகுல் டிராவிட்.. அதிரடியாக அரங்கேறும் சம்பவம் – வெளியான தகவல்கள்
“இதற்குப் பிறகு என்னிடம் இப்படி நடந்து கொண்ட இன்னும் ஒரே ஒருவர் ரிஷப் பண்ட் மட்டும்தான். அவர் மிகவும் அன்பானவர். அவரைப் போன்ற மனிதர்களை பார்ப்பது மிகவும் அரிது. அவர் ரத்தினம் போல் இருக்கக்கூடிய அன்பான நபராக எப்பொழுதும் இருந்திருக்கிறார்” என்று கூறியிருக்கிறார்.






