பாக் ஏழு வீரர்கள் திடீர் நீக்கம்.. உலக கிரிக்கெட்டில் நடக்காத அசிங்கம்.. சுயநலமா மாத்தாதீங்க – ரமீஷ் ராஜா வேண்டுகோள்

0
0

​இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் தோல்விகளை சந்தித்த பாகிஸ்தான் டீம், பிளேயர்களை நடு வழியிலேயே நாடு திரும்ப உத்தரவிட்ட விவகாரம் குறித்து பாகிஸ்தான் முன்னாள் வீரர் ரமீஸ் ராஜா மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

​இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் பாகிஸ்தான் டீம் மிக மோசமான பெர்ஃபார்மன்ஸ் கொடுத்து தோல்வியை தழுவியது. இதனால் அதிர்ச்சியடைந்த பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு, பிளேயர்கள் மற்றும் கோச்களை அதிரடியாக மாற்ற முடிவெடுத்தது.

- Advertisement -

​டீமின் முக்கிய பிளேயர்களான முகமது ரிஸ்வான், இமாம் உல் ஹக் உட்பட ஏழு பிளேயர்களை உடனடியாக சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பியது. மேலும் ஹெட் கோச் சர்பராஸ் அகமதுவையும் அந்த பதவியிலிருந்து நீக்கி நடவடிக்கை எடுத்தது.

​தொடரின் நடுவே இதுபோன்ற அதிரடி மாற்றங்களை செய்வது பிளேயர்களின் கான்ஃபிடன்ஸை பாதிக்கும் என்றும், இது டீமிற்குள் பெரிய குழப்பத்தை மட்டுமே ஏற்படுத்தும் என்றும் கிரிக்கெட் வல்லுனர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

​இதுகுறித்து ரமீஸ் ராஜா பேசும்போது “இது பாகிஸ்தான் கிரிக்கெட் பேனிக் பட்டனை அழுத்திவிட்டதை காட்டுகிறது. இதன் மூலம் வெற்றி கிடைக்கும் என்பதற்கு என்ன கியாரண்டி இருக்கிறது? நடு வழியில் பிளேயர்களை அனுப்புவது செல்ஃபிஷ் டீமாக மாற்றிவிடும்” என்று ஆரம்பித்து “உலக கிரிக்கெட்டில் இதுபோன்று எங்குமே நடந்ததில்லை. இது ஃபுட்பால் தொடரில் மேனேஜரை நீக்குவது போல் இருக்கிறது. இதை எப்படி சரிசெய்வது என்றே தெரியவில்லை” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -