எழுதி வச்சுக்கோங்க.. ஏப்ரல் 17ஆம் தேதி இந்த டீம் கூட.. ஹைதராபாத் 300 ரன் அடிக்கும் – டேல் ஸ்டெய்ன் கணிப்பு

0
390
Steyn

நடப்பு பதினெட்டாவது ஐபிஎல் சீசனில் ஏப்ரல் 17ஆம் தேதி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதன்முறையாக டி20 கிரிக்கெட்டில் 300 ரன்கள் எடுக்கும் என தென் ஆப்பிரிக்கா லெஜெண்ட் டேல் ஸ்டெய்ன் கூறியிருக்கிறார்.

இதுவரை ஐபிஎல் தொடர் வரலாற்றில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 287 ரன்கள் ஆர்சிபி அணிக்கு எதிராக எடுத்ததே மிக அதிகபட்ச ரணாக இருக்கிறது. நேற்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக 286 ரன்கள் எடுத்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

பலமாக மாறிய ஹைதராபாத் அணி

கடந்த ஆண்டு ஹைதராபாத் அணியில் டிராவிடஸ் ஹெட், அபிஷேக் சர்மா மற்றும் ஹென்றி கிளாசன் என மூன்று அதிரடி வீரர்கள் இருந்தார்கள். இந்த நிலையில் அவர்கள் தைரியமாக ஆந்திர மாநில அனிக்காக விளையாடும் மிதவேகப் பந்துவீச்சு ஆல் ரவுண்டர் நிதீஷ் குமார் ரெட்டியை அறிமுகப்படுத்தினார்கள். அவர் அவர்களே எதிர்பார்க்காத அளவுக்கு அதிரடியாக பேட்டிகள் தன்னை வெளிப்படுத்தினார். இதனால் அவர்களுக்கு சிறந்த நான்கு பேட்ஸ்மேன் கிடைத்தார்கள்.

இதைத்தொடர்ந்து இந்த ஆண்டு ஐபிஎல் மெகா ஏலத்தில் வெறும் 11 கோடி ரூபாய்க்கு இசான் கிஷானை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நிர்வாகம் வாங்கியது. பாக்கெட் டைனமென்ட் என்று அவருடைய அதிரடிக்காக அழைக்கப்படும் இஷான் கிஷான் நேற்றைய போட்டியில் அதிரடியாக 47 பந்தில் 106 ரன்கள் குவித்தார். தற்போது அந்த அணியின் பேட்டிங் யூனிட்டில் முதல் ஐந்து வீரர்கள் மிகவும் அதிரடியான வீரர்களாக இருக்கிறார்கள். எனவே இவர்கள் 300 ரன்கள் ஒரு இன்னிங்ஸில் எடுப்பார்கள் என்று நம்பப்படுகிறது.

- Advertisement -

ஏப்ரல் 17ஆம் தேதி இது நடக்கும்

இந்த நிலையில் ஹைதராபாத் அணி குறித்து பேசி இருக்கும் டேல் ஸ்டெய்ன் கூறும்பொழுது “ஏப்ரல் 17ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 300 ரன்கள் முதல் முறையாக எடுக்கும். யாரால் சொல்ல முடியும் அந்த போட்டியை நானும் பார்க்கலாம்” என்று கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க : இஷானின் வெறித்தனமான செலிப்ரேஷன்.. ரோஹித் சர்மாவுக்கும் இன்னும் 2 பேருக்கும்தான் – மைக்கேல் வாகன் கருத்து

அவர் இவ்வாறு கூறியிருக்கும் பொழுது டாஸ் வென்று முதலில் மும்பை இந்தியன்ஸ் பேட்டிங் செய்தால் என்ன செய்ய முடியும் என ஒரு ரசிகர் இதற்கு எதிர் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு பதில் அளித்துள்ள டேல் ஸ்டெய்ன் இது ஒரு நல்ல பாயிண்ட் என கூறியிருக்கிறார். மும்பை இந்தியன்ஸ் மாதிரியான ஒரு அணிக்கு எதிராக 300 ரன்களை ஹைதராபாத் அணி எடுக்கும் என அவர் கூறியிருப்பது தற்பொழுது ரசிகர்களிடையே புகைச்சலை ஏற்படுத்தி இருக்கிறது!

- Advertisement -