ஆர்சிபி மட்டும் இப்படி செஞ்சா.. அதைவிட சந்தோஷம் எனக்கு எதுவும் இல்லை – ராஜத் பட்டிதார் பேட்டி

0
104

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் வெற்றிகரமான அணிகளில் ஒன்றாக கருதப்படும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இந்த முறை நடைபெற்ற மெகா ஏலத்தில் சிறப்பான வீரர்களை வாங்கி தங்களது அணியை வலுவாக கட்டமைத்துள்ளது.

இந்த சூழ்நிலையில் தக்கவைக்கப்பட்ட வீரர்களில் ஒருவரான ராஜத் பட்டிதார் பெங்களூர் அணி குறித்து சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

ஐபிஎல் மெகா ஏலம் 2024

அதிக ரசிகர் பட்டாளத்தைக் கொண்ட அணியான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இதுவரை ஒரு ஐபிஎல் கோப்பையை கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. விராட் கோலி முதல் சிறந்த வீரர்கள் பெங்களூர் அணியை வழி நடத்தினாலும் ஐபிஎல் கோப்பை மட்டுமே இதுவரை எட்டாக்கனியாக உள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் கடந்த இரண்டு வருடங்களாக பாப் டூ பிளசிஸ் அணியை வழிநடத்தி வந்த நிலையில் இந்த ஆண்டு நடைபெற்ற ஏலத்தில் அவரை திரும்ப பெங்களூர் அணி எடுக்கவில்லை.

இந்த சூழ்நிலையில் பெங்களூர் அணியின் மூத்த மற்றும் சீனியர் வீரராக விராட் கோலி மட்டுமே இருக்கிறார். மேலும் இந்த ஆண்டில் எடுக்கப்பட்ட வீரர்களில் கேப்டன் பொறுப்பிற்கு தகுந்த வீரர்களையும் பெங்களூர் அணி எடுத்திருப்பதாக தெரியவில்லை. இந்த சூழ்நிலையில் ஆர்சிபி அணியின் மிடில் வரிசையில் சிறப்பாக விளையாடும் ராஜத் பட்டிதார் கேப்டன் பொறுப்பை ஏற்று அணியை வழி நடத்துவார் என்ற தகவல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் அது குறித்து பட்டிதார் தனது கருத்தை தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -

வாய்ப்பு கிடைத்தால் மகிழ்ச்சியாக இருப்பேன்

இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “நிச்சயமாக ஒரு விஷயம் கூற வேண்டும் என்றால், பெங்களூர் அணியை வழிநடத்த எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தால் அதற்கு நான் மிகத் தயாராக இருக்கிறேன். அந்த வாய்ப்பு கிடைத்தால் மிக மகிழ்ச்சியாக இருப்பேன், ஆனால் இறுதி முடிவு அணி உரிமையாளர்களின் கைகளில் இருக்கிறது. மேலும் அவர்கள் மனது வைத்தால் மட்டுமே இது சாத்தியமாகும்.

இதையும் படிங்க:127 ரன்கள்.. ரஷித் கான் அசத்தல் பவுலிங்.. நபி கடைசி ஓவர் மாஸ் பினிஷிங்.. ஆப்கான் ஜிம்பாப்வே அணியை வென்று தொடரை கைப்பற்றியது

மேலும் இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்கு வாய்ப்பு கிடைத்தது. நான் டெஸ்ட் அணியில் விளையாடியதை ரசித்தேன் ஆனால் சில சமயங்களில் நான் வாய்ப்பை இழந்தேன் என்று வருத்தப்படுகிறேன். ஆனாலும் பரவாயில்லை சில நேரங்களில் விஷயங்கள் உங்கள் வழியில் செல்லாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். கிரிக்கெட்டில் வெற்றி தோல்வி சாதாரணம்தான். ஆனால் இதை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் வேண்டும். தோல்வியில் இருந்து பாடத்தை கற்றுக் கொண்டு முன்னேறுவது அவசியம். எனவே தற்போது நான் அதில் முன்னேறிக் கொண்டிருக்கிறேன். எனக்கான வாய்ப்பை திரும்ப உருவாக்குவேன்” என்று கூறுகிறார்.

- Advertisement -