சொன்னா நம்ப மாட்டீங்க.. நாங்க திரும்பி வந்து ஜெயிக்கிறதுக்கு காரணம் இதுதான் – ரஜத் பட்டிதார் பேட்டி

0
1226
Rajat

2024 ஆம் ஆண்டு ஐ பி எல் தொடரில் ஆர்சிபி அணி எல்லோரையும் ஆச்சரியப்படுத்திக் கொண்டிருக்கிறது. தொடர் தோல்விகளுக்கு பிறகு வந்து வெற்றி பெற்று ப்ளே ஆப் வாய்ப்பில் நீடித்து வருகிறது. இந்த மறு எழுச்சிக்கான காரணம் என்ன என்பது குறித்து அந்த அணியின் முக்கிய பேட்ஸ்மேன் ரஜத் பட்டிதார் பேசியிருக்கிறார்.

ஆர்சிபி அணி நடப்பு ஐபிஎல் தொடரில் தங்கள் முதல் ஆட்டத்தை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே அணிக்கு எதிராக விளையாடி தோற்றது. இதற்கு அடுத்து தங்கள் சொந்த மைதானத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக விளையாடி இரண்டாவது போட்டியில் வெற்றி பெற்றது.

- Advertisement -

இதைத் தொடர்ந்து ஆர்சிபி விளையாடிய 6 போட்டிகளிலும் தோல்வியடைந்தது. அந்த அணி மொத்தம் எட்டு போட்டிகளில் ஒரு போட்டியை மட்டுமே வென்று 7 போட்டிகளை இழந்திருந்தது. அதே சமயத்தில் அந்த அணிக்கு பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பு ஒரு சதவீதம் மட்டுமே இருந்தது. தற்பொழுது அங்கிருந்து ஐந்து போட்டிகளை வென்று, அந்த ஒரு சதவீத பிளே ஆப் வாய்ப்பை தற்பொழுது 80% மேல் மாற்றி இருக்கிறது.

ஆர்சிபி அணியின் மறு எழுச்சிக்கான காரணம் குறித்து பேசி உள்ள ரஜத் பட்டிதார் “அணி உரிமையாளர்கள் வீரர்களை ஆதரிக்கிறார்கள், அணி நிர்வாகம் களத்தில் சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கிறது. விஷயங்கள் எங்கள் வழியில் செல்லாத பொழுதும் அணியின் சூழ்நிலை நன்றாக இருந்தது.

- Advertisement -

இது அணியின் குணாதிசயத்தை உருவாக்குவதில் ஒரு முக்கிய பங்கை வகிக்கிறது என்று நான் நினைக்கிறேன். குறிப்பாக இது ஒரு பெரிய அணி, இந்த அணி பெருமைக்காக விளையாடி இருக்கிறது என்று நினைக்கிறேன். 2016ஆம் ஆண்டும் இதை நாங்கள் செய்திருக்கிறோம். எங்களுக்கு ஏற்கனவே ஒரு உதாரணம் இருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க : கம்பீர் என்னை பற்றி விமர்சனம் பண்ணியது சரிதான்.. நான் அந்த மாதிரிதான் – கெவின் பீட்டர்சன் ஒப்புதல்

தற்போது தங்களின் கடைசி ஆட்டத்தில் சொந்த மைதானத்தில் சிஎஸ்கே அணைக்கு எதிராக 18 ரன்கள் வித்தியாசத்திலோ அல்லது 11 பந்துகள் மீதம் வைத்தோ ஆர்சிபி அணி வென்றால், அனைவரையும் ஆச்சரியப்படுத்தி பிளே ஆப் சுற்றுக்குள் நுழையும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -