நேற்று ஆர்சிபி அணி கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் விராட் கோலி சதத்துடன் ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி குறித்து அந்த அணியின் கேப்டன் ரஜத் படிதார் பேசியிருக்கிறார்.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நான்கு விக்கெட் இழப்புக்கு 192 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து விளையாடிய ஆர்சிபி அணிக்கு விராட் கோலி சிறப்பாக விளையாடி ஆட்டம் இழக்காமல் 60 பந்துகளில் 105 ரன்கள் எடுத்தார். அந்த அணி 19 ஆவது ஓவரில் இலக்கை எட்டி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதுதான் மகிழ்ச்சி
இதுகுறித்து ரஜத் படிதார் பேசும்போது “நாங்கள் இப்போது புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருப்பது தான் எங்களுக்கு முக்கியமானது மற்றும் சந்தோஷமானது. எங்களுடைய வீரர்கள் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு போட்டியில் மிகச் சிறப்பாக செயல்பட்டு அணியை வெற்றி பெற வைத்துக் கொண்டிருக்கிறார்கள். நாங்கள் ஒரு நேரத்தில் ஒரு போட்டி என்ற அளவில்தான் சென்று கொண்டிருக்கிறோம்”
“நாங்கள் அவர்கள் முதல் 10 ஓவர்களில் ஓவருக்கு 11 ரன்கள் எடுத்திருந்தார்கள். அதற்குப் பிறகு அடுத்த 10 ஓவரில் மொத்தமாக அவர்களை 192 ரன்னில் நிறுத்தியது உண்மையில் எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. எங்களுடைய பந்துவீச்சாளர்கள் சிறப்பான முறையில் செயல்பட்டார்கள்”
விராட் இப்படித்தான்
“நாங்கள் நேற்று எங்களுடைய சுழல் பந்துவீச்சாளரை நீக்கிவிட்டு நான்கு வேகப் பந்துவீச்சாளர்களுடன் விளையாடியது நிரந்தரமானது கிடையாது. இந்த ஆடுகளத்தில் மாறுபட்ட பவுன்ஸ் இருந்தது. இதன் காரணமாகவே நாங்கள் இந்த முடிவை எடுத்தோம். இது முழுக்க முழுக்க கண்டிஷன் சம்பந்தப்பட்டது”
இதையும் படிங்க : நான் இந்த சதத்தை பெரிதாக கொண்டாட மாட்டேன்.. வெளியிலிருந்து வந்த பிரச்சனை இதுதான் – விராட் கோலி பேட்டி
“விராட் கோலியை பற்றி எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. அவர் அவ்வளவு சிறப்பாக விளையாடிக் கொண்டிருக்கிறார். அவருக்கு பெரிய சாதனைகளை செய்து கொண்டிருப்பது சாதாரணமாக பழக்கப்பட்ட விஷயமாக மாறிவிட்டது” என்று கூறியிருக்கிறார்.






